வாசகங்கள்
9 மார்ச், 2027
Lenten Weekday/ Frances of Rome, Married Woman, Religious Founder
Frances of Rome, Married Woman, Religious Founder
First Reading
எசேக்கியேல் 47: 1-9, 12
1அம்மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது.
2அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.
3அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார்.⒫
4அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார்.
5அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப்போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது.
6அவர் என்னிடம் “மானிடா! இதைப் பார்த்தாயா?” என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.
7நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன்.
8அவர் என்னிடம் உரைத்தது: “இத் தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும்.
9இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.
12பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 46: 2-3, 5-6, 8-9
2⁽ஆகையால், நிலவுலகம்␢ நிலைகுலைந்தாலும்,␢ மலைகள் ஆழ்கடலில்␢ அதிர்ந்து நடுங்கினாலும்,⁾
3⁽கடலின் அலைகள் கொந்தளித்துப்␢ பொங்கினாலும், அவற்றின் பெருக்கால்␢ குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும்␢ எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (சேலா)⁾
5⁽அந்நகரின் நடுவில்␢ கடவுள் இருக்கின்றார்;␢ அது ஒருபோதும் நிலைகுலையாது;␢ வைகறைதோறும் கடவுள் துணை␢ அதற்கு உண்டு.⁾
6⁽வேற்றினத்தார் கலக்கமுற்றனர்;␢ அரசுகள் ஆட்டம் கண்டன;␢ கடவுளின் குரல் முழங்கிற்று;␢ பூவுலகம் கரைந்தது.⁾
8⁽வாரீர்! ஆண்டவரின்␢ செயல்களைக் காணீர்!␢ அவர் உலகில் ஆற்றியுள்ள␢ திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!⁾
9⁽உலகின் கடையெல்லைவரை␢ போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்;␢ வில்லை ஒடிக்கின்றார்;␢ ஈட்டியை முறிக்கின்றார்.␢ தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.⁾
Verse Before the Gospel
திருப்பாடல்கள் 51: 12a, 14a
12⁽உம் மீட்பின் மகிழ்ச்சியை␢ மீண்டும் எனக்கு அளித்தருளும்;␢ தன்னார்வ மனம் தந்து␢ என்னைத் தாங்கியருளும்.⁾
14⁽கடவுளே! எனது மீட்பின் கடவுளே!␢ இரத்தப் பழியினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ அப்பொழுது, என் நா␢ உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.⁾
Gospel
யோவான் 5: 1-16
1யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார்.
2எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்.
3இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக்கிடப்பர். [இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள்.
4ஏனெனில், ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.]*⒫
5முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.
6இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார்.
7“ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார்.
8இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்” என்றார்.
9உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார்.
10அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள்.
11அவர் மறுமொழியாக “என்னை நலமாக்கியவரே, ‘உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்’ என்று என்னிடம் கூறினார்” என்றார்.
12“‘படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்’ என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள்.
13ஆனால், நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில், அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.
14பின்னர், இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.
15அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.
16ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.