மார்ச் 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
28293031
இன்றுக்கு

வாசகங்கள்

3 மார்ச், 2027

Lenten Weekday/ Katharine Drexel, Virgin, Religious Founder

Katharine Drexel, Virgin, Religious Founder
First Reading

இணைச் சட்டம் 4:1, 5-9

1இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். 5நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படியே நியமங்களையும் முறைமைகளையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். எனவே, நீங்கள் போய் உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் அவற்றைப் பின்பற்ற வேண்டும். 6நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். 7நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? 8நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும் முறைமைகளையும் கொண்ட வேறுபேரினம் ஏதாகிலும் உண்டா? 9கவனமாய் இருங்கள்; உங்கள் கண்களால் நீங்கள் கண்ட அனைத்தையும் மறந்து போகாதபடி உங்கள் இதயங்களில் காத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாள் முழுமையும் நீங்கள் அவற்றை மறக்க வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அவற்றை எடுத்துக் கூறுங்கள்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 147: 12-13, 15-16, 19-20

12⁽எருசலேமே!␢ ஆண்டவரைப் போற்றுவாயாக!␢ சீயோனே!␢ உன் கடவுளைப் புகழ்வாயாக!⁾ 13⁽அவர் உன் வாயில்களின் தாழ்களை␢ வலுப்படுத்துகின்றார்;␢ உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு␢ ஆசி வழங்குகின்றார்.⁾ 15⁽அவர் தமது கட்டளையை␢ உலகினுள் அனுப்புகின்றார்;␢ அவரது வாக்கு␢ மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.⁾ 16⁽அவர் வெண்கம்பளிபோல்␢ பனியைப் பொழிகின்றார்;␢ சாம்பலைப்போல்␢ உறைபனியைத் தூவுகின்றார்;⁾ 19⁽யாக்கோபுக்குத் தமது வாக்கையும்␢ இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்␢ நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.⁾ 20⁽அவர் வேறெந்த இனத்துக்கும்␢ இப்படிச் செய்யவில்லை;␢ அவருடைய நீதிநெறிகள்␢ அவர்களுக்குத் தெரியாது;␢ அல்லேலூயா!⁾
Verse Before the Gospel

யோவான் 6: 63c, 68c

63வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. 68சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
Gospel

மத்தேயு 5: 17-19

17திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். 18‘விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது’ என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். 19எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.