வாசகங்கள்
23 மார்ச், 2027
Tuesday of Holy Week
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 49: 1-6
1⁽தீவு நாட்டினரே, எனக்குச்␢ செவிகொடுங்கள்;␢ தொலைவாழ் மக்களினங்களே,␢ கவனியுங்கள்;␢ கருப்பையில் இருக்கும்போதே␢ ஆண்டவர் என்னை அழைத்தார்;␢ என் தாய் வயிற்றில் உருவாகும் போதே␢ என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.⁾
2⁽என் வாயைக்␢ கூரான வாள்போன்று ஆக்கினார்;␢ தம் கையின் நிழலால்␢ என்னைப் பாதுகாத்தார்;␢ என்னைப் பளபளக்கும்␢ அம்பு ஆக்கினார்;␢ தம் அம்பறாத் துணியில்␢ என்னை மறைத்துக் கொண்டார்.⁾
3⁽அவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன்,␢ இஸ்ரயேலே! உன் வழியாய்␢ நான் மாட்சியுறுவேன்’ என்றார்.⁾
4⁽நானோ, ‘வீணாக நான் உழைத்தேன்:␢ வெறுமையாகவும் பயனின்றியும்␢ என் ஆற்றலைச் செலவழித்தேன்:␢ ஆயினும் எனக்குரிய நீதி␢ ஆண்டவரிடம் உள்ளது;␢ என் பணிக்கான பரிசு␢ என் கடவுளிடம் இருக்கின்றது’ என்றேன்.⁾
5⁽யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும்,␢ சிதறுண்ட இஸ்ரயேலை␢ ஒன்று திரட்டவும்␢ கருப்பையிலிருந்தே ஆண்டவர்␢ என்னைத் தம் ஊழியனாக␢ உருவாக்கினார்;␢ ஆண்டவர் பார்வையில்␢ நான் மதிப்புப்பெற்றவன்;␢ என் கடவுளே என் ஆற்றல்;␢ அவர் இப்பொழுது உரைக்கிறார்:⁾
6⁽அவர் கூறுவது:␢ யாக்கோபின் குலங்களை␢ நிலைநிறுத்துவதற்கும்␢ இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத்␢ திருப்பிக் கொணர்வதற்கும்␢ நீ என் ஊழியனாக இருப்பது␢ எளிதன்றோ?␢ உலகம் முழுவதும்␢ என் மீட்பை அடைவதற்கு␢ நான் உன்னைப் பிற இனத்தாருக்கு␢ ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 71: 1-2, 3-4a, 5ab-6ab, 15 and 17
1⁽ஆண்டவரே! உம்மிடம் நான்␢ அடைக்கலம் புகுந்துள்ளேன்;␢ ஒருபோதும் நான் வெட்கமுற␢ விடாதேயும்.⁾
2⁽உமது நீதிக்கேற்ப␢ என்னை விடுவித்தருளும்;␢ எனக்கு நீர் செவிசாய்த்து␢ என்னை மீட்டுக் கொள்ளும்.⁾
3⁽என் அடைக்கலப் பாறையாக␢ நீர் இருந்தருளும்;␢ கோட்டை அரணாயிருந்து␢ என்னை மீட்டருளும்;␢ ஏனெனில், நீர் எனக்குக்␢ கற்பாறையாகவும்␢ அரணாகவும் இருக்கின்றீர்.⁾
4⁽என் கடவுளே, பொல்லார் கையினின்று␢ என்னைக் காத்தருளும்;␢ நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர்␢ பிடியினின்று என்னைக் காத்தருளும்.⁾
5⁽என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;␢ ஆண்டவரே, இளமைமுதல்␢ நீரே என் நம்பிக்கை.⁾
6⁽பிறப்பிலிருந்து நான் உம்மைச்␢ சார்ந்துள்ளேன்;␢ தாய் வயிற்றிலிருந்து␢ நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;␢ உம்மையே நான் எப்போதும்␢ புகழ்ந்து போற்றுவேன்.⁾
15⁽என் வாய் நாள்தோறும்␢ உமது நீதியையும் நீர் அருளும்␢ மீட்பையும் எடுத்துரைக்கும்;␢ உம் அருட் செயல்களை␢ என்னால் கணிக்க இயலாது.⁾
17⁽கடவுளே, என் இளமைமுதல்␢ எனக்குக் கற்பித்து வந்தீர்;␢ இனிவரும் நாள்களிலும்␢ உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.⁾
Gospel
யோவான் 13: 21-33, 36-38
21இப்படிச் சொன்னபின் இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
22யாரைப் பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.
23இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார்.
24சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, “யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்கேள்” என்றார்.
25இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டார்.
26இயேசு மறுமொழியாக, “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.
27அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். இயேசு அவனிடம், “நீ செய்யவிருப்பதை விரைவில் செய்” என்றார்.
28இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்து கொள்ளவில்லை.
29பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர்.
30யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்.
31அவன் வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.
32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.
33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால், நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.
36சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்” என்றார்.
37பேதுரு அவரிடம், “ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றார்.
38இயேசு அவரைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.