வாசகங்கள்
3 செப்டம்பர், 2028
Twenty-Second Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
சீராக் 3: 17-18, 20, 28-29
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 68: 4-5, 6-7, 10-11
4⁽கடவுளைப் புகழ்ந்து பாடி␢ அவரது பெயரை போற்றுங்கள்;␢ மேகங்கள்மீது வருகிறவரை␢ வாழ்த்திப் பாடுங்கள்;␢ ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம்;␢ அவர்முன் களிகூருங்கள்.⁾
5⁽திக்கற்ற பிள்ளைகளுக்குத்␢ தந்தையாகவும்␢ கணவனை இழந்தாளின்␢ காப்பாளராகவும் இருப்பவர்,␢ தூயகத்தில் உறையும் கடவுள்!⁾
6⁽தனித்திருப்போர்க்குக் கடவுள்␢ உறைவிடம் அமைத்துத் தருகின்றார்;␢ சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு␢ அழைத்துச் செல்கின்றார்; ஆனால்,␢ அவருக்கு எதிராகக் கிளம்புவோர்␢ வறண்ட நிலத்தில் வாழ்வர்.⁾
7⁽கடவுளே! நீர் உம்முடைய␢ மக்கள் முன்சென்று␢ பாலைவெளியில் நடைபோட்டுச்␢ செல்கையில், (சேலா)⁾
10⁽உமக்குரிய உயிர்கள்␢ அதில் தங்கியிருந்தன;␢ கடவுளே! நீர் நல்லவர்;␢ எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு␢ மறுவாழ்வு அளித்தீர்.⁾
11⁽என் தலைவர் செய்தி அறிவித்தார்;␢ அச்செய்தியைப் பரப்பினோர்␢ கூட்டமோ பெரிது;⁾
Second Reading
எபிரேயர் 12: 18-19, 22-24
18நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான, சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல.
19அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தைகூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
22ஆனால், நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர்.
23விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,
24புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.⒫
Alleluia
மத்தேயு 11: 29ab
29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
Gospel
லூக்கா 14: 1, 7-14
1ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
7விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:
8“ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.
9உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.
10நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.
11தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.”⒫
12பிறகு, தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.
13மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.
14அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால், உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.