செப்டம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

20 செப்டம்பர், 2028

Andrew Kim Taegon, Priest, Martyr, Paul Chong Hasang, Catechist, Martyr, and Companions, Martyrs Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

1 கொரிந்தியர் 12: 31 - 13: 13

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 33: 2-3, 4-5, 12 and 22

2⁽யாழிசைத்து ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ பதின் நரம்பு யாழினால்␢ அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;⁾ 3⁽புத்தம்புது பாடல் ஒன்றை␢ அவருக்குப் பாடுங்கள்;␢ திறம்பட இசைத்து␢ மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.⁾ 4⁽ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;␢ அவருடைய செயல்கள் எல்லாம்␢ நம்பிக்கைக்கு உரியவை.⁾ 5⁽அவர் நீதியையும் நேர்மையையும் § விரும்புகின்றார்;␢ அவரது பேரன்பால்␢ பூவுலகு நிறைந்துள்ளது.⁾ 12⁽ஆண்டவரைத் தன் கடவுளாகக்␢ கொண்ட இனம் பேறுபெற்றது;␢ அவர் தமது உரிமைச் சொத்தாகத்␢ தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.⁾ 22⁽உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,␢ உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!⁾
Alleluia

யோவான் 6: 63c, 68c

63வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. 68சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
Gospel

லூக்கா 7: 31-35

31பின்னர் இயேசு, “இத் தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? 32இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை’ என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.⒫ 33எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவுமில்லை; திராட்சை மது குடிக்கவுமில்லை; அவரை, ‘பேய் பிடித்தவன்’ என்றீர்கள். 34மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள். 35எனினும், ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” என்றார்.