செப்டம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

30 செப்டம்பர், 2028

Jerome, Priest, Doctor Obligatory Memorial

அன்றைய திருப்பலி
First Reading

சபை உரையாளர் 11: 9 - 12: 8

9இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.⒫ 10மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே. 1ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. “வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. 2அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், 3வீட்டுக்காவலர்⒜ நடுக்கங்கொள்ள, வலியோர்⒝ தளர்வுறுமுன்னும், அரைப்போர்⒞ மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர்⒟ ஒளி இழந்துபோகுமுன்னும், 4தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள்⒠ அடைத்துக்கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர்⒡ அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. 5மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும்⒢, வெட்டுக்கிளியைப்போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; 6வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், 7மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்புமுன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. 8வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபை உரையாளர்; எல்லாமே வீண்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 90: 3-4, 5-6, 12-13, 14 and 17

3⁽மனிதரைப் புழுதிக்குத்␢ திரும்பிடச் செய்கின்றீர்;␢ ‘மானிடரே! மீண்டும்␢ புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.⁾ 4⁽ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள்,␢ உம் பார்வையில்␢ கடந்துபோன நேற்றைய நாள் போலவும்␢ இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.⁾ 5⁽வெள்ளமென மானிடரை␢ வாரிக்கொண்டு செல்கின்றீர்;␢ அவர்கள் வைகறையில் முளைத்தெழும்␢ புல்லுக்கு ஒப்பாவர்;⁾ 6⁽அது காலையில் தளிர்த்துப்␢ பூத்துக் குலுங்கும்;␢ மாலையில் வாடிக் காய்ந்து போகும்.⁾ 12⁽எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க␢ எங்களுக்குக் கற்பியும்;␢ அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப்␢ பெற்றிடுவோம்.⁾ 13⁽ஆண்டவரே, திரும்பி வாரும்;␢ எத்துணைக் காலம் இந்நிலை?␢ உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.⁾ 14⁽காலைதோறும் உமது பேரன்பால்␢ எங்களுக்கு நிறைவளியும்;␢ அப்பொழுது வாழ்நாளெல்லாம்␢ நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.⁾ 17⁽எம் கடவுளாம் தலைவரின் இன்னருள்␢ எம்மீது தங்குவதாக!␢ நாங்கள் செய்பவற்றில்␢ எங்களுக்கு வெற்றி தாரும்!␢ ஆம், நாங்கள் செய்பவற்றில்␢ வெற்றியருளும்!⁾
Alleluia

2 திமொத்தேயு 1: 10

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 9: 43b-45

43[a]அப்பொழுது எல்லாரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள்.⒯[b]இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், 44“நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்” என்றார். 45அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.