செப்டம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

24 செப்டம்பர், 2028

Twenty-Fifth Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
First Reading

ஆமோஸ் 8: 4-7

4⁽“வறியோரை நசுக்கி,␢ நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை␢ அழிக்கின்றவர்களே,␢ இதைக் கேளுங்கள்;⁾ 5⁽‘நாம் தானியங்களை விற்பதற்கு␢ அமாவாசை எப்பொழுது முடியும்?␢ கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு␢ ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்?␢ மரக்காலைச்* சிறியதாக்கி,␢ எடைக்கல்லைக் கனமாக்கி,␢ கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்;⁾ 6⁽வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும்␢ இரு காலணிக்கு␢ வறியோரையும் வாங்கலாம்;␢ கோதுமைப் பதர்களையும்␢ விற்கலாம்’ என்று␢ நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?’⁾ 7⁽ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது␢ ஆணையிட்டுக் கூறுகின்றார்:␢ “அவர்களுடைய இந்தச் செயல்களுள்␢ ஒன்றையேனும்␢ நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 113: 1-2, 4-6, 7-8

1⁽அல்லேலூயா!␢ ஆண்டவரின் ஊழியர்களே,␢ அவரைப் புகழுங்கள்.␢ அவரது பெயரைப் போற்றுங்கள்.⁾ 2⁽ஆண்டவரது பெயர்␢ வாழ்த்தப்பெறுவதாக!␢ இப்பொழுதும் எப்பொழுதும்␢ வாழ்த்தப்பெறுவதாக!⁾ 4⁽மக்களினங்கள் அனைத்திற்கும்␢ ஆண்டவர் மேலானவர்;␢ வானங்களையும்விட உயர்ந்து␢ அவரது மாட்சி.⁾ 5⁽நம் கடவுளாகிய ஆண்டவருக்கு␢ நிகர் யார்?␢ அவர்போல வானளாவிய உயரத்தில்␢ வீற்றிருப்பவர் யார்?⁾ 6⁽அவர் வானத்தையும் வையகத்தையும்␢ குனிந்து பார்க்கின்றார்;⁾ 7⁽ஏழைகளைத் தூசியிலிருந்து␢ அவர் தூக்கி நிறுத்துகின்றார்;␢ வறியரைக் குப்பை மேட்டிலிருந்து␢ கைதூக்கி விடுகின்றார்;⁾ 8⁽உயர்குடி மக்களிடையே – § தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே –␢ அவர்களை அமரச் செய்கின்றார்.⁾
Second Reading

1 திமொத்தேயு 2: 1-8

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

2 கொரிந்தியர் 8: 9

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 16: 1-13

1இயேசு தம் சீடருக்குக் கூறியது: “செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. 2தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார். 3அந்த வீட்டுப் பொறுப்பாளர், ‘நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. 4வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 5பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், ‘நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். 6அதற்கு அவர், ‘நூறு குடம் எண்ணெய்’ என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், ‘இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்’ என்றார். 7பின்பு அடுத்தவரிடம், ‘நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நூறு மூடை* கோதுமை’ என்றார். அவர், ‘இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்’ என்றார். 8நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.⒫ 9“ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். 10மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். 11நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? 12பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?⒫ 13“எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது.”