வாசகங்கள்
25 செப்டம்பர், 2028
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
நீதிமொழிகள் 3: 27-34
27உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே.
28அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, ‘போய் வா, நாளைக்குத் தருகிறேன்’ என்று சொல்லாதே.
29அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?
30ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே.
31வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.
32ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவுகொள்கின்றார்.
33பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.
34செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்;
Responsorial Psalm
திருப்பாடல்கள் 15: 2-3a, 3bc-4ab, 5
2⁽மாசற்றவராய் நடப்போரே! —␢ இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;␢ உளமார உண்மை பேசுவர்;⁾
3⁽தம் நாவினால் புறங்கூறார்;␢ தம் தோழருக்குத் தீங்கிழையார்;␢ தம் அடுத்தவரைப் பழித்துரையார்.⁾
4⁽நெறிதவறி நடப்போரை␢ இழிவாகக் கருதுவர்;␢ ஆண்டவருக்கு அஞ்சுவோரை␢ உயர்வாக மதிப்பர்;␢ தமக்குத் துன்பம் வந்தாலும்,␢ கொடுத்த வாக்குறுதியை மீறார்;⁾
5⁽தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;␢ மாசற்றவருக்கு எதிராகக்␢ கையூட்டுப் பெறார்; —␢ இவ்வாறு நடப்போர்␢ என்றும் நிலைத்திருப்பர்.⁾
Alleluia
மத்தேயு 5: 16
16இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
Gospel
லூக்கா 8: 16-18
16“எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத்தண்டின் மீது வைப்பர்.
17வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.
18ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.”