செப்டம்பர் 2028

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

10 செப்டம்பர், 2028

Twenty-Third Sunday in Ordinary Time

அன்றைய திருப்பலி
First Reading

சாலமோனின் ஞானம் 9: 13-18b

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 90: 3-4, 5-6, 12-13, 14 and 17

3⁽மனிதரைப் புழுதிக்குத்␢ திரும்பிடச் செய்கின்றீர்;␢ ‘மானிடரே! மீண்டும்␢ புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.⁾ 4⁽ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள்,␢ உம் பார்வையில்␢ கடந்துபோன நேற்றைய நாள் போலவும்␢ இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.⁾ 5⁽வெள்ளமென மானிடரை␢ வாரிக்கொண்டு செல்கின்றீர்;␢ அவர்கள் வைகறையில் முளைத்தெழும்␢ புல்லுக்கு ஒப்பாவர்;⁾ 6⁽அது காலையில் தளிர்த்துப்␢ பூத்துக் குலுங்கும்;␢ மாலையில் வாடிக் காய்ந்து போகும்.⁾ 12⁽எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க␢ எங்களுக்குக் கற்பியும்;␢ அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப்␢ பெற்றிடுவோம்.⁾ 13⁽ஆண்டவரே, திரும்பி வாரும்;␢ எத்துணைக் காலம் இந்நிலை?␢ உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.⁾ 14⁽காலைதோறும் உமது பேரன்பால்␢ எங்களுக்கு நிறைவளியும்;␢ அப்பொழுது வாழ்நாளெல்லாம்␢ நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.⁾ 17⁽எம் கடவுளாம் தலைவரின் இன்னருள்␢ எம்மீது தங்குவதாக!␢ நாங்கள் செய்பவற்றில்␢ எங்களுக்கு வெற்றி தாரும்!␢ ஆம், நாங்கள் செய்பவற்றில்␢ வெற்றியருளும்!⁾
Second Reading

பிலமோன் 1: 9-10, 12-17

9அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுவிக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக* அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் 10பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்த போது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். 12அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். 13நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். 14ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. 15அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மைவிட்டுச் சிறிதுகாலம் பிரிந்திருந்தான் போலும்! 16இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்!⒫ 17எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
Alleluia

திருப்பாடல்கள் 119: 135

135⁽உம் ஊழியன்மீது உமது முகஒளி␢ வீசச் செய்யும்!␢ உம் விதிமுறைகளை எனக்குக்␢ கற்பித்தருளும்.⁾
Gospel

லூக்கா 14: 25-33

25பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: 26“என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. 27தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.⒫ 28“உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? 29இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 30‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால், முடிக்க இயலவில்லை’ என்பார்களே!⒫ 31“வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? 32எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? 33அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.