வாசகங்கள்
5 செப்டம்பர், 2028
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
1 கொரிந்தியர் 2: 10b-16
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 145: 8-9, 10-11, 12-13ab, 13cd-14
8⁽ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;␢ எளிதில் சினம் கொள்ளாதவர்;␢ பேரன்பு கொண்டவர்.⁾
9⁽ஆண்டவர் எல்லாருக்கும்␢ நன்மை செய்பவர்;␢ தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்␢ இரக்கம் காட்டுபவர்.⁾
10⁽ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்␢ உமக்கு நன்றி செலுத்தும்;␢ உம்முடைய அன்பர்கள்␢ உம்மைப் போற்றுவார்கள்.⁾
11⁽அவர்கள் உமது அரசின் மாட்சியை␢ அறிவிப்பார்கள்;␢ உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.⁾
12⁽மானிடர்க்கு␢ உம் வல்லமைச் செயல்களையும்␢ உமது அரசுக்குரிய␢ மாட்சியின் பேரொளியையும்␢ புலப்படுத்துவார்கள்.⁾
13⁽உமது அரசு␢ எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;␢ உமது ஆளுகை␢ தலைமுறை தலைமுறையாக உள்ளது.␢ ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்␢ உண்மையானவர்;␢ தம் செயல்கள் அனைத்திலும்␢ தூய்மையானவர்.⁾
14⁽தடுக்கி விழும் யாவரையும்␢ ஆண்டவர் தாங்குகின்றார்.␢ தாழ்த்தப்பட்ட யாவரையும்␢ தூக்கிவிடுகின்றார்.⁾
Alleluia
லூக்கா 7: 16
16அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
Gospel
லூக்கா 4: 31-37
31பின்பு, இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார்.
32அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில், அவர் அதிகாரத்தோடு கற்பித்தார்.
33தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.
34அவரைப் பிடித்திருந்த பேய், “ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று உரத்த குரலில் கத்தியது.
35“வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று.
36எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.
37அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.