வாசகங்கள்
13 செப்டம்பர், 2028
John Chrysostom, Bishop, Doctor Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
1 கொரிந்தியர் 7: 25-31
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 45: 11-12, 14-15, 16-17
11⁽உனது எழிலில்␢ நாட்டங்கொள்வார் மன்னர்;␢ உன் தலைவர் அவரே;␢ அவரைப் பணிந்திடு!⁾
12⁽தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;␢ செல்வமிகு சீமான்கள்␢ உன்னருள் வேண்டி நிற்பர்.⁾
14⁽பலவண்ணப் பட்டுடுத்தி␢ மன்னரிடம் அவளை அழைத்து வருவர்;␢ கன்னித் தோழியர் புடைசூழ␢ அவள் அடியெடுத்து வந்திடுவாள்.⁾
15⁽மன்னவரின் மாளிகைக்குள்␢ நுழையும்போது அவர்கள்␢ மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்␢ அழைத்து வரப்படுவர்.⁾
16⁽உம் தந்தையரின் அரியணையில்␢ உம் மைந்தரே வீற்றிருப்பர்;␢ அவர்களை நீர் உலகுக்கெலாம்␢ இளவரசர் ஆக்கிடுவீர்.⁾
17⁽என் பாடல் வழிவழியாய்␢ உம் பெயரை நிலைக்கச் செய்யும்;␢ ஆகையால், எல்லா இனத்தாரும்␢ உமை வாழ்த்திடுவர்.⁾
Alleluia
லூக்கா 6: 23ab
23அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.
Gospel
லூக்கா 6: 20-26
20இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ⁽“ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், இறையாட்சி␢ உங்களுக்கு உரியதே.⁾
21⁽இப்பொழுது பட்டினியாய் இருப்போரே,␢ நீங்கள் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.␢ இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே,␢ நீங்கள் பேறுபெற்றோர்;␢ ஏனெனில், நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.⁾⒫
22மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.
23அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.
24⁽ஆனால் செல்வர்களே␢ ஐயோ! உங்களுக்குக் கேடு!␢ ஏனெனில், நீங்கள் எல்லாம்␢ அனுபவித்துவிட்டீர்கள்.⁾
25⁽இப்போது உண்டு கொழுந்திருப்போரே,␢ ஐயோ! உங்களுக்குக் கேடு!␢ ஏனெனில், பட்டினி கிடப்பீர்கள்.␢ இப்போது சிரித்து இன்புறுவோரே,␢ ஐயோ! உங்களுக்குக் கேடு!␢ ஏனெனில், துயருற்று அழுவீர்கள்.⁾⒫
26மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.