வாசகங்கள்
4 பிப்ரவரி, 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
எபிரேயர் 12: 18-19, 21-24
18நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான, சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல.
19அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தைகூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.
21“நான் அஞ்சி நடுங்குகிறேன்” என்று மோசேயே சொல்லுமளவுக்கு அக்காட்சி அச்சம் விளைவித்தது.⒫
22ஆனால், நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர்.
23விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,
24புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 48: 2-3ab, 3cd-4, 9, 10-11
2⁽அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும்␢ சீயோன் மலை அனைத்து உலகிற்கும்␢ மகிழ்ச்சியால் இலங்குகின்றது;␢ மாவேந்தரின் நகரும் அதுவே.⁾
3⁽அதன் அரண்மனைகளில்␢ கடவுள் வீற்றிருந்து, தம்மையே␢ அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.⁾
4⁽இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்;␢ அணிவகுத்து ஒன்றாக வந்தனர்;⁾
9⁽கடவுளே! உமது கோவிலின் நடுவில்␢ உம் பேரன்பை நினைந்து உருகினோம்.⁾
10⁽கடவுளே! உமது பெயரைப் போலவே,␢ உமது புகழும் பூவுலகின்␢ கடை எல்லைவரை எட்டுகின்றது;␢ உமது வலக்கை␢ நீதியை நிலைநாட்டுகின்றது.⁾
11⁽சீயோன் மலை மகிழ்வதாக!␢ யூதாவின் நகர்கள்␢ உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு␢ அக்களிப்பனவாக!⁾
Alleluia
மாற்கு 1: 15
15“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.
Gospel
மாற்கு 6: 7-13
7அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.
8மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.
9ஆனால், மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
10மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.
11உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார்;
12அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;
13பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.