வாசகங்கள்
10 பிப்ரவரி, 2027
Ash Wednesday. Begin Lenten Preparation for the Easter Triduum. Not a Holy Day of Obligation. Day of Fast (Ages 18-59) and Abstinence from Meat(Age 14 and up).
அன்றைய திருப்பலி
First Reading
யோவேல் 2: 12-18
12⁽“இப்பொழுதாவது␢ உண்ணா நோன்பிருந்து,␢ அழுது புலம்பிக்கொண்டு,␢ உங்கள் முழு இதயத்தோடு␢ என்னிடம் திரும்பி வாருங்கள்”␢ என்கிறார் ஆண்டவர்.⁾
13⁽“நீங்கள் உங்கள் உடைகளைக்␢ கிழித்துக்கொள்ள வேண்டாம்,␢ இதயத்தைக் கிழித்துக்கொண்டு␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம்␢ திரும்பி வாருங்கள்.”␢ அவர் அருள் நிறைந்தவர்,␢ இரக்கம் மிக்கவர்;␢ நீடிய பொறுமையுள்ளவர்,␢ பேரன்பு மிக்கவர்;␢ செய்யக் கருதிய தீங்கைக் குறித்து␢ மனம் மாறுகின்றவர்.⁾
14⁽ஒருவேளை அவர் தம்␢ மனத்தை மாற்றிக்கொண்டு,␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு␢ தானியப் படையலையும் § நீர்மப் படையலையும்␢ நீங்கள் அளிக்குமாறு␢ உங்களுக்கு ஆசி வழங்குவார்.␢ இதை யார் அறிவார்?⁾
15⁽சீயோனில் எக்காளம் ஊதி␢ எச்சரியுங்கள்;␢ புனிதமான உண்ணா நோன்புக்கென␢ நாள் குறியுங்கள்;␢ வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.⁾
16⁽மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்;␢ புனித கூட்டத்திற்கு § ஏற்பாடு செய்யுங்கள்;␢ முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள்,␢ பிள்ளைகளையும்␢ பால் குடிக்கும் குழந்தைகளையும்␢ ஒருசேரக் கூட்டுங்கள்;␢ மணமகன் தன் அறையை விட்டு␢ வெளியேறட்டும்;␢ மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப்␢ புறப்படட்டும்.⁾
17⁽ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள்␢ கோவில் மண்டபத்திற்கும்␢ பலிபீடத்திற்கும் இடையே நின்று␢ அழுதவண்ணம்,␢ “ஆண்டவரே, உம் மக்கள்மீது␢ இரக்கம் கொள்ளும்;␢ உமது உரிமைச்சொத்தை␢ வேற்றினத்தார் நடுவில்␢ நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும்␢ ஆளாக்காதீர்”␢ எனச் சொல்வார்களாக! § ‘அவர்களுடைய கடவுள் எங்கே?’ என␢ வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?⁾
18⁽அப்பொழுது ஆண்டவர்␢ தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு␢ தம் மக்கள் மீது கருணை காட்டினார்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 51: 3-4, 5-6ab, 12-13, 14 and 17
3⁽ஏனெனில், என் குற்றங்களை␢ நான் உணர்கின்றேன்;␢ என் பாவம் எப்போதும்␢ என் மனக்கண்முன் நிற்கின்றது.⁾
4⁽உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;␢ உம் பார்வையில் தீயது செய்தேன்;␢ எனவே, உம் தீர்ப்பினால்␢ உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;␢ உம் தண்டனைத் தீர்ப்பில்␢ நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.⁾
5⁽இதோ! தீவினையோடு␢ என் வாழ்வைத் தொடங்கினேன்;␢ பாவத்தோடே என் அன்னை␢ என்னைக் கருத்தாங்கினாள்.⁾
6⁽இதோ! நீர் விரும்புவது␢ உள்ளத்து உண்மையையே;␢ மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.⁾
12⁽உம் மீட்பின் மகிழ்ச்சியை␢ மீண்டும் எனக்கு அளித்தருளும்;␢ தன்னார்வ மனம் தந்து␢ என்னைத் தாங்கியருளும்.⁾
13⁽அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு␢ உம் வழிகளைக் கற்பிப்பேன்;␢ பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.⁾
14⁽கடவுளே! எனது மீட்பின் கடவுளே!␢ இரத்தப் பழியினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ அப்பொழுது, என் நா␢ உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.⁾
17⁽கடவுளுக்கேற்ற பலி␢ நொறுங்கிய நெஞ்சமே;␢ கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த␢ உளத்தை நீர் அவமதிப்பதில்லை.⁾
Second Reading
2 கொரிந்தியர் 5: 20 - 6:2
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Verse Before the Gospel
திருப்பாடல்கள் 95: 8
8⁽அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்␢ மாசாவிலும் செய்ததுபோல்,␢ உங்கள் இதயத்தைக்␢ கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.⁾
Gospel
மத்தேயு 6: 1-6, 16-18
1“மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
2“நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
3நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.
4அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.”
5“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
6ஆனால், நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
16மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
17நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.
18அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.