வாசகங்கள்
20 பிப்ரவரி, 2027
Lenten Weekday
அன்றைய திருப்பலி
First Reading
இணைச் சட்டம் 26: 16-19
16இந்த முறைமைகளையும் நியமங்களையும் நீ நிறைவேற்றுமாறு உன் கடவுளாகிய ஆண்டவர் இன்று உனக்குக் கட்டளையிட்டுள்ளார். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவற்றை நிறைவேற்றுவதில் கருத்தாயிரு.
17ஆண்டவரை உன் கடவுளாய் ஏற்பதாகவும் உனக்குக் கடவுளாக இருப்பார் என்றும், அவருடைய வழிகளில் நடப்பதாகவும், அவருடைய நியமங்களையும், கட்டளைகளையும் முறைமைகளையும் கடைப்பிடிப்பதாகவும், அவர் குரலுக்குச் செவி கொடுப்பதாகவும் இன்று நீ அவருக்கு வாக்களித்துள்ளாய்.
18நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும்,
19அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 119: 1-2, 4-5, 7-8
1⁽மாசற்ற வழியில் நடப்போர்␢ பேறுபெற்றோர்;␢ ஆண்டவர் திருச்சட்டப்படி␢ நடப்போர் பேறுபெற்றோர்.⁾
2⁽அவர் தந்த ஒழுங்குமுறைகளைக்␢ கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்;␢ முழுமனத்தோடு அவரைத் தேடுவோர்␢ பேறுபெற்றோர்.⁾
4⁽ஆண்டவரே!␢ நீர் உம் நியமங்களைத் தந்தீர்;␢ அவற்றை நாங்கள் முழுமையாய்க்␢ கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.⁾
5⁽உம்முடைய விதிமுறைகளை␢ நான் கடைப்பிடிக்க,␢ என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால்␢ எவ்வளவோ நலம்!⁾
7⁽உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு␢ நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.⁾
8⁽உம் விதிமுறைகளை␢ நான் கடைப்பிடிப்பேன்;␢ என்னை ஒருபோதும்␢ கைவிட்டுவிடாதேயும்.⁾
Verse Before the Gospel
2 கொரிந்தியர் 6: 2b
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
மத்தேயு 5: 43-48
43“‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.
44ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.*”⒫
45“இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.
46உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?
47நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
48ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.”