வாசகங்கள்
14 பிப்ரவரி, 2027
First Sunday of Lent
அன்றைய திருப்பலி
First Reading
தொடக்க நூல் 9: 8-15
8கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது:
9“இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும்
10பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்.
11உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.”
12அப்பொழுது கடவுள், “எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக,
13என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்.
14மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது,
15எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 25: 4-5, 6-7, 8-9
4⁽ஆண்டவரே, உம் பாதைகளை␢ நான் அறியச்செய்தருளும்;␢ உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.⁾
5⁽உமது உண்மை நெறியில்␢ என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;␢ ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;␢ உம்மையே நான் நாள் முழுவதும்␢ நம்பியிருக்கின்றேன்;⁾
6⁽ஆண்டவரே, உமது இரக்கத்தையும்,␢ உமது பேரன்பையும் நினைந்தருளும்;␢ ஏனெனில், அவை␢ தொடக்கமுதல் உள்ளவையே.⁾
7⁽என் இளமைப் பருவத்தின் பாவங்களையும்,␢ என் குற்றங்களையும் நினையாதேயும்,␢ உமது பேரன்பிற்கேற்ப␢ என்னை நினைத்தருளும்;␢ ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.⁾
8⁽ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;␢ ஆகையால், அவர் பாவிகளுக்கு␢ நல்வழியைக் கற்பிக்கின்றார்.⁾
9⁽எளியோரை நேரிய வழியில்␢ அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத்␢ தமது வழியைக் கற்பிக்கின்றார்.⁾
Second Reading
1 பேதுரு 3: 18-22
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Verse Before the Gospel
மத்தேயு 4: 4b
4அவர் மறுமொழியாக, “⦃‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’⦄ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.
Gospel
மாற்கு 1: 12-15
12உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
13பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.
14யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.
15“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.