வாசகங்கள்
7 பிப்ரவரி, 2027
Fifth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
யோபு 7: 1-4, 6-7
1⁽மண்ணில் வாழ்வது␢ மனிதருக்குப் போரட்டந்தானே?␢ அவர்களின் நாள்கள் கூலியாள்களின்␢ நாள்களைப் போன்றவைதாமே?⁾
2⁽நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும்,␢ கூலிக்குக் காத்திருக்கும்␢ வேலையாள் போலவும்,⁾
3⁽வெறுமையான திங்கள்கள்␢ எனக்கு வாய்த்தன;␢ இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.⁾
4⁽படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்!␢ இரவோ நீண்டிருக்கும்;␢ விடியும்வரை புரண்டு உழல்வேன்,⁾
6⁽என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும்␢ விரைந்தோடுகின்றன; அவை␢ நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.⁾
7⁽என் உயிர் வெறுங்காற்றே என்பதை␢ நினைவுகூர்வீர்; என் கண்கள்␢ மீண்டும் நன்மையைக் காணா.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 147: 1-2, 3-4, 5-6
1⁽அல்லேலூயா!␢ நம்முடைய கடவுளைப்␢ புகழ்ந்து பாடுவது நல்லது;␢ அவரைப் புகழ்வது இனிமையானது;␢ அதுவே ஏற்புடையது.⁾
2⁽ஆண்டவர் எருசலேமை␢ மீண்டும் கட்டி எழுப்புகின்றார்;␢ நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக்␢ கூட்டிச் சேர்க்கின்றார்;⁾
3⁽உடைந்த உள்ளத்தோரைக்␢ குணப்படுத்துகின்றார்;␢ அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.⁾
4⁽விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,␢ அவை ஒவ்வொன்றையும்␢ பெயர் சொல்லி அழைக்கின்றார்.⁾
5⁽நம் தலைவர் மாண்புமிக்கவர்;␢ மிகுந்த வல்லமையுள்ளவர்;␢ அவர்தம் நுண்ணறிவு␢ அளவிடற்கு அரியது.⁾
6⁽ஆண்டவர் எளியோர்க்கு␢ ஆதரவளிக்கின்றார்;␢ பொல்லாரையோ␢ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.⁾
Second Reading
1 கொரிந்தியர் 9: 16-19, 22-23
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
மத்தேயு 8: 17
17இவ்வாறு, ⁽‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; § நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’⁾ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.
Gospel
மாற்கு 1: 29-39
29பின்பு, அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
30சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.
31இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.⒫
32மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.
33நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.
34பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
35இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.
36சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.
37அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள்.
38அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார்.
39பின்பு, அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.