வாசகங்கள்
8 பிப்ரவரி, 2027
Ordinary Weekday/ Jerome Emiliani, Priest, Religious Founder/ Josephine Bakhita, Virgin
Josephine Bakhita, Virgin
First Reading
தொடக்க நூல் 1: 1-19
1தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
2மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
3அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
4கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.
5கடவுள் ஒளிக்குப் ‘பகல்’ என்றும் இருளுக்கு ‘இரவு’ என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.⒫
6அப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார்.
7கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.
8கடவுள் வானத்திற்கு ‘விண்ணுலகம்’ என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.⒫
9அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
10கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
11அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
12புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.
13மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.⒫
14அப்பொழுது கடவுள், “பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!
15அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
16கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
17கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்;
18பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
19மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 104: 1-2a, 5-6, 10 and 12, 24 and 35c
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!␢ நீர் மாண்பையும் மாட்சியையும்␢ அணிந்துள்ளவர்.⁾
2⁽பேரொளியை␢ ஆடையென அணிந்துள்ளவர்;␢ வான்வெளியைக்␢ கூடாரமென விரித்துள்ளவர்;⁾
5⁽நீவீர் பூவுலகை அதன்␢ அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்;␢ அது என்றென்றும் அசைவுறாது.⁾
6⁽அதனை ஆழ்கடல்␢ ஆடையென மூடியிருந்தது;␢ மலைகளுக்கும் மேலாக␢ நீர்த்திரள் நின்றது;⁾
10⁽பள்ளத்தாக்குகளில்␢ நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்;␢ அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;⁾
12⁽நீருற்றுகளின் அருகில்␢ வானத்துப் பறவைகள்␢ கூடுகட்டிக் கொள்கின்றன;␢ அவை மரக்கிளைகளினின்று␢ இன்னிசை இசைக்கின்றன;⁾
24⁽ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்␢ எத்தனை எத்தனை!␢ நீர் அனைத்தையும்␢ ஞானத்தோடு செய்துள்ளீர்!␢ பூவுலகம்␢ உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.⁾
35⁽பாவிகள் பூவுலகினின்று␢ ஒழிந்து போவார்களாக!␢ தீயோர்கள் இனி␢ இல்லாது போவார்களாக!␢ என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு!␢ அல்லேலூயா!⁾
Alleluia
மத்தேயு 4: 23
23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
Gospel
மாற்கு 6: 53-56
53அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள்.
54அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து,
55அச்சுற்றுப் பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள்.
56மேலும், அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.