வாசகங்கள்
9 பிப்ரவரி, 2027
Ordinary Weekday
அன்றைய திருப்பலி
First Reading
தொடக்க நூல் 1: 20 - 2: 4a
20அப்பொழுது கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!” என்றார்.
21இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.
22கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார்.
23மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.⒫
24அப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
25கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.⒫
26அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார்.⒫
27⁽கடவுள் தம் உருவில்␢ மானிடரைப்* படைத்தார்;␢ கடவுளின் உருவிலேயே␢ அவர்களைப் படைத்தார்;␢ ஆணும் பெண்ணுமாக␢ அவர்களைப் படைத்தார்.⁾⒫
28கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.
29அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்.
30எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
31கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.
1விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின.
2மேலும், கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
3கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில், கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார்.⒫
4இவையே விண்ணுலக, மண்ணுலகப் படைப்பின் தோற்ற முறைமையாம்.⒯ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கிய பொழுது,
Responsorial Psalm
திருப்பாடல்கள் 8: 4-5, 6-7, 8-9
4⁽மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு␢ அவர்கள் யார்?␢ மனிதப் பிறவிகளை␢ நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு␢ அவர்கள் எம்மாத்திரம்?⁾
5⁽ஆயினும், அவர்களைக்␢ கடவுளாகிய* உமக்குச்␢ சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;␢ மாட்சியையும் மேன்மையையும்␢ அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.⁾
6⁽உமது கை படைத்தவற்றை␢ அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;␢ எல்லாவற்றையும்␢ அவர்கள் பாதங்களுக்குக்␢ கீழ்ப்படுத்தியுள்ளீர்.⁾
7⁽ஆடுமாடுகள், எல்லா வகையான␢ காட்டு விலங்குகள்,⁾
8⁽வானத்துப் பறவைகள்,␢ கடல் மீன்கள்,␢ ஆழ்கடலில் நீந்திச் செல்லும்␢ உயிரினங்கள் அனைத்தையும்␢ அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.⁾
9⁽ஆண்டவரே, எங்கள் தலைவரே,␢ உமது பெயர் உலகெங்கும்␢ எவ்வளவு மேன்மையாய்␢ விளங்குகின்றது!⁾
Alleluia
திருப்பாடல்கள் 119: 36, 29b
36⁽உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம்␢ நாட்டங்கொள்ளச் செய்யும்;␢ தன்னலத்தை நாடவிடாதேயும்.⁾
29⁽பொய் வழியை␢ என்னைவிட்டு விலக்கியருளும்;␢ உமது திருச்சட்டத்தை␢ எனக்குக் கற்றுத்தாரும்.⁾
Gospel
மாற்கு 7: 1-13
1ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர்.
2அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள்.
3பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;
4சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே* உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
5ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.
6அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ⁽‘இம்மக்கள் உதட்டினால் என்னைப்␢ போற்றுகின்றனர்;␢ இவர்கள் உள்ளமோ என்னை விட்டு␢ வெகு தொலையில் இருக்கிறது.⁾
7⁽மனிதக் கட்டளைகளைக்␢ கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர்.␢ இவர்கள் என்னை வழிபடுவது வீண்’⁾ என்று அவர் எழுதியுள்ளார்.
8நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
9மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.
10‘உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா!
11ஆனால், ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால்,
12அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.
13இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.⒫