வாசகங்கள்
27 பிப்ரவரி, 2027
Lenten Weekday
அன்றைய திருப்பலி
First Reading
மீக்கா 7: 14-15, 18-20
14⁽ஆண்டவரே,␢ உமது உரிமைச் சொத்தாய் இருக்கும்␢ மந்தையாகிய உம்முடைய மக்களை␢ உமது கோலினால் மேய்த்தருளும்!␢ அவர்கள் கர்மேலின் நடுவே␢ காட்டில் தனித்து␢ வாழ்கின்றார்களே!␢ முற்காலத்தில் நடந்ததுபோல␢ அவர்கள் பாசானிலும்␢ கிலயாதிலும் மேயட்டும்!⁾
15⁽எகிப்து நாட்டிலிருந்து␢ நீங்கள் புறப்பட்டுவந்த நாளில்␢ நடந்ததுபோல␢ நான் அவர்களுக்கு␢ வியத்தகு செயல்களைக்␢ காண்பிப்பேன்.⁾
18⁽உமக்கு நிகரான இறைவன் யார்?␢ எஞ்சியிருப்போரின்␢ குற்றத்தைப் பொறுத்து␢ நீர் உமது உரிமைச் சொத்தில்␢ எஞ்சியிருப்போரின் தீச்செயலை␢ மன்னிக்கின்றீர்;␢ உமக்கு நிகரானவர் யார்?␢ அவர் தம் சினத்தில்␢ என்றென்றும் நிலைத்திரார்;␢ ஏனெனில், அவர்␢ பேரன்புகூர்வதில்␢ விருப்பமுடையவர்;⁾
19⁽அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்;␢ நம் தீச்செயல்களை␢ மிதித்துப்போடுவார்;␢ நம் பாவங்கள் அனைத்தையும்␢ ஆழ்கடலில் எறிந்து விடுவார்.⁾
20⁽பண்டைய நாளில்␢ எங்கள் மூதாதையருக்கு␢ நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல␢ யாக்கோபுக்கு␢ வாக்குப் பிறழாமையையும்␢ ஆபிரகாமுக்குப்␢ பேரன்பையும் காட்டியருள்வீர்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 103: 1-2, 3-4, 9-10, 11-12
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் முழு உளமே!␢ அவரது திருப்பெயரை ஏத்திடு!⁾
2⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ அவருடைய கனிவான செயல்கள்␢ அனைத்தையும் மறவாதே!⁾
3⁽அவர் உன் குற்றங்களையெல்லாம்␢ மன்னிக்கின்றார்;␢ உன் நோய்களையெல்லாம்␢ குணமாக்குகின்றார்.⁾
4⁽அவர் உன் உயிரைப்␢ படுகுழியினின்று மீட்கின்றார்;␢ அவர் உனக்குப்␢ பேரன்பையும் இரக்கத்தையும்␢ மணிமுடியாகச் சூட்டுகின்றார்.⁾
9⁽அவர் எப்பொழுதும்␢ கடிந்து கொள்பவரல்லர்;␢ என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.⁾
10⁽அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப␢ நம்மை நடத்துவதில்லை;␢ நம் குற்றங்களுக்கு ஏற்ப␢ நம்மைத் தண்டிப்பதில்லை.⁾
11⁽அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்␢ காட்டும் பேரன்பு␢ மண்ணினின்று விண்ணளவு போன்று␢ உயர்ந்தது.⁾
12⁽மேற்கினின்று கிழக்கு␢ எத்துணைத் தொலைவிலுள்ளதோ,␢ அத்துணைத் தொலைவிற்கு␢ நம் குற்றங்களை நம்மிடமிருந்து␢ அவர் அகற்றுகின்றார்.⁾
Verse Before the Gospel
லூக்கா 15: 18
18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்;
Gospel
லூக்கா 15: 1-3, 11-32
1வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.
2பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
11மேலும் இயேசு கூறியது: “ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, \"அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்\" என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.
13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.
14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;
15எனவே, அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.
16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால், அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
17அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!
18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்;
19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார்.⒫
20உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.
21மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.
22தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;
23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.
24ஏனெனில், என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.⒫
25“அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு,
26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார்.
27அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார்.
28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.
29அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.
30ஆனால், விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.
31அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.
32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில், உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”