பிப்ரவரி 2027

ஞா தி செ பு வி வெ
123456
78910111213
14151617181920
21222324252627
28
இன்றுக்கு

வாசகங்கள்

23 பிப்ரவரி, 2027

Lenten Weekday/ Polycarp, Bishop, Martyr

Polycarp, Bishop, Martyr
First Reading

எசாயா 1: 10, 16-20

10⁽எருசலேமே,␢ உன்னை ஆளுகிறவர்களும்␢ உன் மக்களும்,␢ சோதோம் கொமோராவைப்␢ போன்றவர்களாயிருக்கின்றனர்;␢ நம் ஆண்டவரின்␢ அறிவுரையைக் கேளுங்கள்;␢ அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.⁾ 16⁽உங்களைக் கழுவித்␢ தூய்மைப்படுத்துங்கள்;␢ உங்கள் தீச்செயலை␢ என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்;␢ தீமை செய்தலை விட்டொழியுங்கள்;⁾ 17⁽நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்;␢ நீதியை நாடித் தேடுங்கள்;␢ ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்;␢ திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்;␢ கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.⁾ 18⁽“வாருங்கள், இப்பொழுது␢ நாம் வழக்காடுவோம்”␢ என்கிறார் ஆண்டவர்;␢ “உங்கள் பாவங்கள்␢ கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன;␢ எனினும் உறைந்த பனிபோல␢ அவை வெண்மையாகும்.␢ இரத்த நிறமாய்␢ அவை சிவந்திருக்கின்றன;␢ எனினும் பஞ்சைப்போல்␢ அவை வெண்மையாகும்.⁾ 19⁽மனமுவந்து நீங்கள்␢ எனக்கு இணங்கி நடந்தால்;␢ நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.⁾ 20⁽மாறாக, இணங்க மறுத்து␢ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால்,␢ திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்;␢ ஏனெனில் ஆண்டவர்தாமே␢ இதைக் கூறினார்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 50: 8-9, 16bc-17, 21 and 23

8⁽நீங்கள் கொண்டுவரும்␢ பலிகளை முன்னிட்டு␢ நான் உங்களைக் கண்டிக்கவில்லை;␢ உங்கள் எரிபலிகள் எப்போதும்␢ என் முன்னிலையில் உள்ளன.⁾ 9⁽உங்கள் வீட்டின் காளைகளையோ,␢ உங்கள் தொழுவத்தின்␢ ஆட்டுக்கிடாய்களையோ,␢ நான் ஏற்றுக்கொள்வதில்லை.⁾ 16⁽ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து␢ இவ்வாறு கூறுகின்றார்;␢ ‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு␢ உங்களுக்கு என்ன தகுதி?␢ என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு␢ உங்களுக்கு என்ன அருகதை?⁾ 17⁽நீங்களோ ஒழுங்குமுறையை␢ வெறுக்கின்றீர்கள்;␢ என் கட்டளைகளைத்␢ தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.⁾ 21⁽இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும்,␢ நான் மௌனமாய் இருந்தேன்;␢ நானும் உங்களைப் போன்றவர் என␢ எண்ணிக் கொண்டீர்கள்;␢ ஆனால், இப்பொழுது␢ உங்களைக் கண்டிக்கின்றேன்;␢ உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன்␢ ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.⁾ 23⁽நன்றிப்பலி செலுத்துவோர்␢ என்னை மேன்மைப்படுத்துவர்.␢ தம் வழியைச் செம்மைப்படுத்துவோர்␢ கடவுளாம் நான் அருளும்␢ மீட்பைக் கண்டடைவர்.⁾
Verse Before the Gospel

எசேக்கியேல் 18: 31

31எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டு விடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாக வேண்டும்?
Gospel

மத்தேயு 23: 1-12

1பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: 2“மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். 3ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். 4சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள். 5தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை* அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். 6விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; 7சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி* என அழைப்பதையும் விரும்புகிறார்கள். 8ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். 9இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். 10நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். 11உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். 12தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.”⒫