வாசகங்கள்
18 ஜனவரி, 2026
Second Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
எசாயா 49:3, 5-6
3⁽அவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன்,␢ இஸ்ரயேலே! உன் வழியாய்␢ நான் மாட்சியுறுவேன்’ என்றார்.⁾
5⁽யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும்,␢ சிதறுண்ட இஸ்ரயேலை␢ ஒன்று திரட்டவும்␢ கருப்பையிலிருந்தே ஆண்டவர்␢ என்னைத் தம் ஊழியனாக␢ உருவாக்கினார்;␢ ஆண்டவர் பார்வையில்␢ நான் மதிப்புப்பெற்றவன்;␢ என் கடவுளே என் ஆற்றல்;␢ அவர் இப்பொழுது உரைக்கிறார்:⁾
6⁽அவர் கூறுவது:␢ யாக்கோபின் குலங்களை␢ நிலைநிறுத்துவதற்கும்␢ இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத்␢ திருப்பிக் கொணர்வதற்கும்␢ நீ என் ஊழியனாக இருப்பது␢ எளிதன்றோ?␢ உலகம் முழுவதும்␢ என் மீட்பை அடைவதற்கு␢ நான் உன்னைப் பிற இனத்தாருக்கு␢ ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 40:2, 4, 7-8, 8-9, 10
2⁽அழிவின் குழியிலிருந்து␢ என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்;␢ சேறு நிறைந்த பள்ளத்தினின்று␢ தூக்கியெடுத்தார்;␢ கற்பாறையின்மேல் நான்␢ காலூன்றி நிற்கச் செய்தார்;␢ என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.⁾
4⁽ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே␢ பேறு பெற்றவர்;␢ அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்;␢ பொய்யானவற்றைச் சாராதவர்.⁾
7⁽எனவே, ‛இதோ வருகின்றேன்;␢ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் § எழுதப்பட்டுள்ளது;⁾
8⁽என் கடவுளே! உமது திருவுளம்␢ நிறைவேற்றுவதில்␢ நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;␢ உமது திருச்சட்டம் என் உள்ளத்தில்␢ இருக்கின்றது’ என்றேன் நான்.⁾
9⁽என் நீதியை நீர் நிலைநாட்டிய␢ நற்செய்தியை␢ மாபெரும் சபையில் அறிவித்தேன்;␢ நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;␢ ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.⁾
10⁽உமது நீதியை நான்␢ என் உள்ளத்தின் ஆழத்தில்␢ மறைத்து வைக்கவில்லை;␢ உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும்␢ நீர் அருளும் மீட்பைப் பற்றியும்␢ கூறியிருக்கின்றேன்;␢ உம் பேரன்பையும் உண்மையையும்␢ மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.⁾
Reading II
1 கொரிந்தியர் 1:1-3
1❮1-3❯கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது:␢ இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.⒫
2Same as above
3Same as above
Alleluia
யோவான் 1:14, 12
14⁽வாக்கு மனிதர் ஆனார்;␢ நம்மிடையே குடிகொண்டார்.␢ அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.␢ அருளும் உண்மையும்␢ நிறைந்து விளங்கிய அவர்␢ தந்தையின் ஒரே மகன்␢ என்னும் நிலையில்␢ இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.⁾
12⁽அவரிடம் நம்பிக்கை கொண்டு␢ அவரை ஏற்றுக்கொண்ட␢ ஒவ்வொருவருக்கும் அவர்␢ கடவுளின் பிள்ளைகள் ஆகும்␢ உரிமையை அளித்தார்.⁾
Gospel
யோவான் 1:29-34
29மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.
30எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.
31இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால், இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்” என்றார்.⒫
32தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: “தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.
33இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால், தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ‘தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார்.
34நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.”