ஜனவரி 2026

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

19 ஜனவரி, 2026

Monday of the Second Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

1 சாமுவேல் 15:16-23

16அப்போது சாமுவேல் சவுலை நோக்கி, “நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்கு கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன்” என, சவுல், “சொல்லுங்கள்” என்றார்.⒫ 17சாமுவேல் கூறியது: “நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்தபோதல்லவா இஸ்ரயேல் குலங்களுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலுக்கு அரசராகத் திருப்பொழிவு செய்தார். 18ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, நீ சென்று அந்தப் பாவிகளான அமலேக்கியரை அழித்து விட்டு வா. இறுதிவரை போரிட்டு அவரை ஒழித்துவிடு” என்று சொன்னார். 19அப்படியிருக்க, நீர் ஏன் ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை? கொள்ளைப் பொருள் மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்ததேன்? 20அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, “ஆண்டவரின் குரலுக்கு நான் செவி கொடுத்தேன். அவர் காட்டிய வழியிலும் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால், அமலேக்கியரை அழித்துவிட்டேன். 21ஆனால், வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர்” என்றார்.⒫ 22⁽அப்போது சாமுவேல் கூறியது:␢ “ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது␢ எரி பலிகள், பிற பலிகள் செலுத்துவதா?␢ அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா?␢ கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது.␢ கீழ்ப்படிதல் ஆட்டுக் கிடாய்களின்␢ கொழுப்பை விட மேலானது!⁾ 23⁽கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்!␢ முரட்டுத்தனம் சிலை வழிபாட்டுக்கு␢ ஒப்பான குற்றம்.␢ நீர் ஆண்டவரின் வார்த்தையைப்␢ புறக்கணித்தீர்!␢ அவரும் உம்மை அரச பதவியினின்று␢ நீக்கிவிட்டார்.⁾⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 50:8-9, 16-17, 21 and 23

8⁽நீங்கள் கொண்டுவரும்␢ பலிகளை முன்னிட்டு␢ நான் உங்களைக் கண்டிக்கவில்லை;␢ உங்கள் எரிபலிகள் எப்போதும்␢ என் முன்னிலையில் உள்ளன.⁾ 9⁽உங்கள் வீட்டின் காளைகளையோ,␢ உங்கள் தொழுவத்தின்␢ ஆட்டுக்கிடாய்களையோ,␢ நான் ஏற்றுக்கொள்வதில்லை.⁾ 16⁽ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து␢ இவ்வாறு கூறுகின்றார்;␢ ‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு␢ உங்களுக்கு என்ன தகுதி?␢ என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு␢ உங்களுக்கு என்ன அருகதை?⁾ 17⁽நீங்களோ ஒழுங்குமுறையை␢ வெறுக்கின்றீர்கள்;␢ என் கட்டளைகளைத்␢ தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.⁾ 21⁽இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும்,␢ நான் மௌனமாய் இருந்தேன்;␢ நானும் உங்களைப் போன்றவர் என␢ எண்ணிக் கொண்டீர்கள்;␢ ஆனால், இப்பொழுது␢ உங்களைக் கண்டிக்கின்றேன்;␢ உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன்␢ ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.⁾ 23⁽நன்றிப்பலி செலுத்துவோர்␢ என்னை மேன்மைப்படுத்துவர்.␢ தம் வழியைச் செம்மைப்படுத்துவோர்␢ கடவுளாம் நான் அருளும்␢ மீட்பைக் கண்டடைவர்.⁾
Alleluia

எபிரேயர் 4:12

12கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
Gospel

மாற்கு 2:18-22

18யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?” என்று கேட்டனர். 19அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது. 20ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள். 21எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். 22அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது” என்றார்.