வாசகங்கள்
14 ஜனவரி, 2026
Wednesday of the First Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
1 சாமுவேல் 3:1-10, 19-20
1சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை.
2அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை.
3கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.
4அப்போது ஆண்டவர், “சாமுவேல்” என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி,
5ஏலியிடம் ஓடி, “இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர், “நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்” என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.
6ஆண்டவர் மீண்டும் “சாமுவேல்” என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அவரோ, “நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்” என்றார்.
7சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
8மூன்றாம் முறையாக ஆண்டவர் “சாமுவேல்” என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார்.
9பின்பு, ஏலி சாமுவேலை நோக்கி “சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.⒫
10அப்போது ஆண்டவர் வந்து நின்று, “சாமுவேல், சாமுவேல்” என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், “பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று மறு மொழி கூறினான்.⒫
19சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.
20சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 40:2 and 5, 7-8, 8-9, 10
2⁽அழிவின் குழியிலிருந்து␢ என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்;␢ சேறு நிறைந்த பள்ளத்தினின்று␢ தூக்கியெடுத்தார்;␢ கற்பாறையின்மேல் நான்␢ காலூன்றி நிற்கச் செய்தார்;␢ என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.⁾
5⁽ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை␢ நீர் எமக்கெனச் செய்துள்ளீர்;␢ உமக்கு நிகரானவர் எவரும் இலர்;␢ என் கடவுளே!␢ உம் அருஞ்செயல்களும்␢ திட்டங்களும் எங்களுக்காகவே;␢ அவற்றை நான் எடுத்துரைக்க␢ விரும்புவேனாகில்␢ அவை எண்ணிலடங்கா.⁾
7⁽எனவே, ‛இதோ வருகின்றேன்;␢ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் § எழுதப்பட்டுள்ளது;⁾
8⁽என் கடவுளே! உமது திருவுளம்␢ நிறைவேற்றுவதில்␢ நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;␢ உமது திருச்சட்டம் என் உள்ளத்தில்␢ இருக்கின்றது’ என்றேன் நான்.⁾
9⁽என் நீதியை நீர் நிலைநாட்டிய␢ நற்செய்தியை␢ மாபெரும் சபையில் அறிவித்தேன்;␢ நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;␢ ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.⁾
10⁽உமது நீதியை நான்␢ என் உள்ளத்தின் ஆழத்தில்␢ மறைத்து வைக்கவில்லை;␢ உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும்␢ நீர் அருளும் மீட்பைப் பற்றியும்␢ கூறியிருக்கின்றேன்;␢ உம் பேரன்பையும் உண்மையையும்␢ மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.⁾
Alleluia
யோவான் 10:27
27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel
மாற்கு 1:29-39
29பின்பு, அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
30சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.
31இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.⒫
32மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்.
33நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது.
34பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.
35இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.
36சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள்.
37அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள்.
38அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார்.
39பின்பு, அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.