ஜனவரி 2026

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

9 ஜனவரி, 2026

Friday after Epiphany

அன்றைய திருப்பலி
Reading I

1 யோவான் 5:5-13

5இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? 6நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை. 7எனவே சான்று அளிப்பவை மூன்று இருக்கின்றன. 8தூய ஆவியும் நீரும் இரத்தமுமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்கம் கொண்டவை. 9மனிதர் தரும் சான்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமே! கடவுள் தரும் சான்று அதை விட மேலானது அன்றோ! கடவுள் தம் மகனுக்குச் சான்று பகர்ந்துள்ளார். 10இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் தம்முள் கொண்டிருக்கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில், தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை. 11கடவுள் நமக்கு நிலை வாழ்வை அளித்துள்ளார். இந்த வாழ்வு அவர் மகனிடம் இருக்கிறது. இதுவே அச்சான்று. 12இறைமகனைக் கொண்டிருப்போர் வாழ்வைக் கொண்டுள்ளனர்; அவரைக் கொண்டிராதோர் வாழ்வைக் கொண்டிரார். 13இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்து கொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை எழுதுகிறேன்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 147:12-13, 14-15, 19-20

12⁽எருசலேமே!␢ ஆண்டவரைப் போற்றுவாயாக!␢ சீயோனே!␢ உன் கடவுளைப் புகழ்வாயாக!⁾ 13⁽அவர் உன் வாயில்களின் தாழ்களை␢ வலுப்படுத்துகின்றார்;␢ உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு␢ ஆசி வழங்குகின்றார்.⁾ 14⁽அவர் உன் எல்லைப்புறங்களில்␢ அமைதி நிலவச் செய்கின்றார்;␢ உயர்தரக் கோதுமை வழங்கி␢ உன்னை நிறைவடையச் செய்கின்றார்.⁾ 15⁽அவர் தமது கட்டளையை␢ உலகினுள் அனுப்புகின்றார்;␢ அவரது வாக்கு␢ மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.⁾ 19⁽யாக்கோபுக்குத் தமது வாக்கையும்␢ இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்␢ நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.⁾ 20⁽அவர் வேறெந்த இனத்துக்கும்␢ இப்படிச் செய்யவில்லை;␢ அவருடைய நீதிநெறிகள்␢ அவர்களுக்குத் தெரியாது;␢ அல்லேலூயா!⁾
Alleluia

மத்தேயு 4:23

23அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
Gospel

லூக்கா 5:12-16

12இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என மன்றாடினார். 13இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. 14இயேசு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கட்டளையிட்டார். 15ஆயினும், இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்து கொண்டிருந்தார்கள். 16அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.