வாசகங்கள்
13 ஜனவரி, 2026
Tuesday of the First Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
1 சாமுவேல் 1:9-20
9ஒருநாள் அவர்கள் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி,ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
10அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார்.
11அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது; “படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியேபடாது.”⒫
12அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார்.
13அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன; குரல் கேட்கவில்லை, ஆகவே, ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார்.
14ஏலி அவரை நோக்கி, “எவ்வளவு காலம் நீர் குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து” என்றார்.
15அதற்கு அன்னா மறுமொழியாக, “இல்லை என் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண், திராட்சை இரசத்தையோ வேறு எந்த மதுவையோ நான் அருந்தவில்லை. மாறாக, ஆண்டவர் திரு முன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.
16உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருதவேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன்” என்று கூறினார்.⒫
17பிறகு ஏலி, “மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார்” என்று பதிலளித்தார்,
18அதற்கு அன்னா, “உம் அடியாள் உம் கண்முன்னே அருள்பெறுவாளாக!” என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவில்லை.
19அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாழ்ந்தார். ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார்.
20உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ⦃“நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்”⦄ என்று சொல்லி, அவர் அவனுக்குச் ‘சாமுவேல்’ என்று பெயரிட்டார்.⒫
Responsorial Psalm
1 சாமுவேல் 2:1, 4-5, 6-7, 8
1⁽அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது:␢ “ஆண்டவரை முன்னிட்டு␢ என் இதயம் மகிழ்கின்றது!␢ ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது!␢ என் வாய் என் எதிரிகளைப்␢ பழிக்கின்றது!␢ ஏனெனில், நான் நீர் அளிக்கும்␢ மீட்பில் களிப்படைகிறேன்.⁾
4⁽வலியோரின் வில்கள்␢ உடைபடுகின்றன! தடுமாறினோர்␢ வலிமை பெறுகின்றனர்!⁾
5⁽நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு␢ உணவு பெறுகின்றனர்.␢ பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார்␢ ஆகியுள்ளனர்!␢ மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள்,␢ பல புதல்வரைப் பெற்றவளோ␢ தனியள் ஆகின்றாள்!⁾
6⁽ஆண்டவர் கொல்கிறார்;␢ உயிரும் தருகின்றார்;␢ பாதாளத்தில் தள்ளுகிறார்;␢ உயர்த்துகின்றார்;⁾
7⁽ஆண்டவர் ஏழையாக்குகிறார்;␢ செல்வராக்குகின்றார்;␢ தாழ்த்துகின்றார்;␢ மேன்மைப்படுத்துகின்றார்;⁾
8⁽புழுதியினின்று அவர்␢ ஏழைகளை உயர்த்துகின்றார்;␢ குப்பையினின்று வறியவரைத்␢ தூக்கிவிடுகின்றார்;␢ உயர்குடியினரோடு அவர்களை␢ அமர்த்துகின்றார்!␢ மாண்புறு அரியணையை அவர்␢ களுக்கு உரிமையாக்குகின்றார்!␢ உலகின் அடித்தளங்கள்␢ ஆண்டவருக்கு உரியவை!␢ அவற்றின் மேல் அவர்␢ உலகை நிறுவினார்!⁾
Alleluia
1 தெசலோனிக்கர் 2:13
13கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது.
Gospel
மாற்கு 1:21-28
21அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.
22அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில், அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
23அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.
24அவரைப் பிடித்திருந்த ஆவி, “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்தியது.
25“வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார்.
26அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.
27அவர்கள் அனைவரும் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.
28அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.