ஜனவரி 2026

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

24 ஜனவரி, 2026

Memorial of Saint Francis de Sales, Bishop and Doctor of the Church

அன்றைய திருப்பலி
Reading I

2 சாமுவேல் 1:1-4, 11-12, 19, 23-27

1சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார். 2மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான். 3“நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று தாவீது அவனை வினவ, “நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்” என்று அவன் பதில் கூறினான்.⒫ 4“என்ன நடந்தது? என்னிடம் சொல்” என்று தாவீது கேட்க, அவன், “வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்” என்று கூறினான். 11தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். 12சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத்தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில், அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள்.⒫ 19⁽‘இஸ்ரயேல்! உனது மாட்சி␢ உன் மலைகளிலே மாண்டு␢ கிடக்கின்றது!␢ மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!⁾ 23⁽சவுல்! யோனத்தான்!␢ அன்புடையார், அருளுடையார்!␢ வாழ்விலும் சாவிலும்␢ இணைபிரியார்! கழுகினும்␢ அவர்கள் விரைந்து செல்வர்!␢ அரியினும் அவர்கள்␢ வலிமைமிக்கோர்!⁾ 24⁽இஸ்ரயேல் புதல்வியரே!␢ சவுலுக்காக அழுங்கள்!␢ செந்நிற மென்துகிலால் உங்களை␢ உடுத்தியவர் அவரே!␢ பொன்னின் நகைகளினால் உம்␢ உடைகளை ஒளிரச் செய்தாரே!⁾ 25⁽போர் முனையில் வீரர் எங்ஙனம்␢ வீழ்ந்துபட்டனர்!␢ உன் மலைகளிலே யோனத்தான்␢ மாண்டு கிடக்கின்றான்!⁾ 26⁽சகோதரன் யோனத்தான்! உனக்காக␢ என் உளம் உடைந்து போனது!␢ எனக்கு உவகை அளித்தவன் நீ!␢ என் மீது நீ பொழிந்த பேரன்பை␢ என்னென்பேன்!␢ அது மகளிரின் காதலையும்␢ மிஞ்சியது அன்றோ!⁾ 27⁽மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!␢ போர்க்கலன்கள் எங்ஙனம்␢ அழிந்தன!”⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 80:2-3, 5-7

2⁽எப்ராயிம், பென்யமின்,␢ மனாசேயின் முன்னிலையில்␢ உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து␢ எம்மை மீட்க வாரும்!⁾ 3⁽கடவுளே, எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்!⁾ 5⁽கண்ணீராம் உணவை␢ அவர்கள் உண்ணச் செய்தீர்;␢ கண்ணீரை அவர்கள்␢ பெருமளவு பருகச் செய்தீர்.⁾ 6⁽எங்கள் அண்டை நாட்டாருக்கு␢ எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்;␢ எங்கள் எதிரிகள்␢ எம்மை ஏளனம் செய்தார்கள்.⁾ 7⁽படைகளின் கடவுளே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;␢ எம்மை மீட்குமாறு␢ உமது முக ஒளியைக் காட்டியருளும்.⁾
Alleluia

திருத்தூதர் பணிகள் 16:14

14அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.
Gospel

மாற்கு 3:20-21

20அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. 21அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.