வாசகங்கள்
7 ஜனவரி, 2026
Wednesday after Epiphany
அன்றைய திருப்பலி
Reading I
1 யோவான் 4:11-18
11அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
12கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும்.⒫
13அவர் தமது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோமெனவும் அவர் நம்மிடம் இணைந்திருக்கிறாரெனவும் அறிந்து கொள்கிறோம்.
14தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம்.
15இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் இணைந்திருக்கிறார்; அவரும் கடவுளோடு இணைந்திருக்கிறார்.⒫
16கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை அறிந்துள்ளோம்; அதை நம்புகிறோம். கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்.
17கடவுள் இருப்பதுபோல் நாமும் இவ்வுலகில் இருக்கிறோம். எனவே, தீர்ப்பு நாளில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போம். இவ்வாறு, நம்மிடையே உள்ள அன்பு நிறைவடைகிறது.
18அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும். ஏனெனில், அச்சத்தில் தண்டனை உணர்வு அடங்கியுள்ளது; அச்சம் கொண்டுள்ளவரிடம் அன்பு முழு நிறைவு அடையாது.⒫
Responsorial Psalm
திருப்பாடல்கள் 72:1-2, 10, 12-13
1⁽கடவுளே, அரசருக்கு உமது␢ நீதித்தீர்ப்பை வழங்கும்␢ ஆற்றலை அளியும்;␢ அரச மைந்தரிடம்␢ உமது நீதி விளங்கச் செய்யும்.⁾
2⁽அவர் உம் மக்களை␢ நீதியோடு ஆள்வாராக!␢ உம்முடையவரான எளியோர்க்கு␢ நீதித்தீர்ப்பு வழங்குவாராக!⁾
10⁽தர்சீசு அரசர்களும்␢ தீவுகளின் அரசர்களும்␢ காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;␢ சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள்␢ நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.⁾
12⁽தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும்␢ திக்கற்ற எளியோரையும்␢ அவர் விடுவிப்பார்.⁾
13⁽வறியோர்க்கும் ஏழைகட்கும்␢ அவர் இரக்கம் காட்டுவார்;␢ ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.⁾
Alleluia
1 திமொத்தேயு 3:16
16நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமேயில்லை. அது பின்வருமாறு: ⁽“மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்;␢ தூய ஆவியால் நேர்மையாளர் என␢ மெய்ப்பிக்கப்பட்டார்;␢ வானதூதருக்குத் தோன்றினார்.␢ பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்;␢ உலகினரால் நம்பிக்கையோடு␢ ஏற்கப்பெற்றார்; § மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்.”⁾
Gospel
மாற்கு 6:45-52
45இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.
46அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.
47பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால், அவர் தனியே கரையில் இருந்தார்.
48அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை.
49அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, “அது பேய்” என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.
50ஏனெனில், எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்;
51பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்.
52ஏனெனில், அப்பங்கள்பற்றிய நிகழ்ச்சியை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.