ஜூலை 2026

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

31 ஜூலை, 2026

Memorial of Saint Ignatius of Loyola, Priest

அன்றைய திருப்பலி
Reading I

எரேமியா 26:1-9

1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு: 2“ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்று கொண்டு, அங்கு வழிபாடு செலுத்தவரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே. 3ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீயவழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக் கொள்வேன்’.⒫ 4நீ அவர்களிடம் சொல்லவேண்டியது: ‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும், 5நீங்கள் செவி சாய்க்காதபொழுதும் நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பி வைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில், 6இக்கோவிலைச் சீலோவைப் போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்.”⒫ 7ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர். 8மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, “நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்” என்று கூச்சலிட்டனர். 9“இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் ஏரேமியாவைச் சூழ்ந்து கொண்டனர்.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 69:5, 8-10, 14

5⁽கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்;␢ என் குற்றங்கள் உமக்கு␢ மறைவானவை அல்ல.⁾ 8⁽என் சகோதரருக்கு␢ வேற்று மனிதனானேன்;␢ என் தாயின் பிள்ளைகளுக்கு␢ அயலான் ஆனேன்.⁾ 9⁽உமது இல்லத்தின்மீது␢ எனக்குண்டான ஆர்வம்␢ என்னை எரித்துவிட்டது;␢ உம்மைப் பழித்துப் பேசினவர்களின்␢ பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.⁾ 10⁽நோன்பிருந்து நான்␢ நெக்குருகி அழுதேன்;␢ அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று.⁾ 14⁽சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து␢ என்னைக் காத்தருளும்;␢ என்னை வெறுப்போரிடமிருந்தும்␢ ஆழ்கடலிலிருந்தும்␢ என்னை விடுவித்தருளும்.⁾
Alleluia

1 பேதுரு 1:25

25⁽நம் ஆண்டவரின் வார்த்தையோ␢ என்றென்றும் நிலைத்திருக்கும்.”⁾ இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.
Gospel

மத்தேயு 13:54-58

54தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? 55இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? 56இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். 57இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். 58அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.