ஜூலை 2026

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

18 ஜூலை, 2026

Saturday of the Fifteenth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

மீக்கா 2:1-5

1⁽தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து␢ தீச்செயல் புரியத் திட்டமிட்டுக்␢ கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு␢ ஐயோ கேடு!␢ பொழுது புலர்ந்தவுடன்␢ தங்கள் கைவலிமையினால்␢ அவர்கள் அதைச்␢ செய்து முடிக்கின்றார்கள்.⁾ 2⁽வயல் வெளிகள்மீது ஆசை கொண்டு,␢ அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்;␢ வீடுகள்மேல் இச்சை கொண்டு␢ அவற்றைக்␢ கைப்பற்றிக் கொள்கின்றார்கள்;␢ ஆண்களை ஒடுக்கி,␢ அவர்கள் வீட்டையும்␢ உரிமைச் சொத்தையும்␢ பறிமுதல் செய்கின்றார்கள்.⁾ 3⁽ஆதலால், ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “இந்த இனத்தாருக்கு எதிராகத்␢ தீமை செய்யத் திட்டமிடுகிறேன்;␢ அதனினின்று␢ உங்கள் தலையை விடுவிக்க␢ உங்களால் இயலாது;␢ நீங்கள் ஆணவம் கொண்டு␢ நடக்கமாட்டீர்கள்;␢ ஏனெனில், காலம் தீயதாய் இருக்கும்.⁾ 4⁽அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி␢ இரங்கற்பா இயற்றி,␢ ‘அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே;␢ ஆண்டவருடைய மக்களின்␢ உரிமைச்சொத்து கைமாறிவிட்டதே!␢ நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக்␢ கொள்ளைக்காரர்களுக்குப்␢ பகிர்ந்தளிக்கின்றாரே!’ என்று␢ ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.⁾ 5⁽ஆதலால், நூல்பிடித்துப்␢ பாகம் பிரித்து␢ உங்களுக்குத் தருபவன் எவனும்␢ ஆண்டவரின் சபையில் இரான்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 10:1-2, 3-4, 7-8, 14

1⁽ஆண்டவரே, ஏன் தொலைவில்␢ நிற்கின்றீர்?␢ தொல்லைமிகு நேரங்களில்␢ ஏன் மறைந்துகொள்கின்றீர்?⁾ 2⁽பொல்லார் தம் இறுமாப்பினால்␢ எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர்;␢ அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில்␢ அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக.⁾ 3⁽பொல்லார் தம் தீய நாட்டங்களில்␢ தற்பெருமை கொள்கின்றனர்;␢ பேராசையுடையோர் ஆண்டவரைப்␢ பழித்துப் புறக்கணிக்கின்றனர்.⁾ 4⁽பொல்லார் செருக்கு உள்ளவராதலால்␢ அவரைத் தேடார்;␢ அவர்கள் எண்ணமெல்லாம்␢ ‛கடவுள் இல்லை!⁾ 7⁽அவர்களது வாய் சாபமும் கபடும்␢ கொடுமையும் நிறைந்தது;␢ அவர்களது நாவினடியில்␢ கேடும் தீங்கும் இருக்கின்றன.⁾ 8⁽ஊர்களில் அவர்கள் ஒளிந்து␢ காத்திருக்கின்றனர்;␢ சூதறியாதவர்களை மறைவான இடங்களில்␢ கொலை செய்கின்றனர்;␢ திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே␢ அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.⁾ 14⁽ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்;␢ கேட்டையும் துயரத்தையும் பார்த்து,␢ உதவி செய்யக் காத்திருக்கின்றீர்;␢ திக்கற்றவர் தம்மை␢ உம்மிடம் ஒப்படைக்கின்றனர்;␢ அனாதைக்கு நீரே துணை.⁾
Alleluia

2 கொரிந்தியர் 5:19

19உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.⒫
Gospel

மத்தேயு 12:14-21

14பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். 15இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்களெல்லாரையும் அவர் குணமாக்கினார். 16தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார். 17இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின; 18⁽“இதோ என் ஊழியர்;␢ இவர் நான் தேர்ந்துகொண்டவர்.␢ இவரே என் அன்பர்;␢ இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது;␢ இவருள் என் ஆவி␢ தங்கும்படி செய்தேன்;␢ இவர் மக்களினங்களுக்கு␢ நீதியை அறிவிப்பார்.⁾ 19⁽இவர் சண்டைசச்சரவு செய்யமாட்டார்;␢ கூக்குரலிடமாட்டார்;␢ தம் குரலைத் தெருவில்␢ எழுப்பவுமாட்டார்;␢ நீதியை வெற்றி பெறச் செய்யும்வரை,⁾ 20⁽நெரிந்த நாணலை முறியார்;␢ புகையும் திரியை அணையார்.⁾ 21⁽எல்லா மக்களினங்களும்␢ இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.”⁾