வாசகங்கள்
16 ஜூலை, 2026
Thursday of the Fifteenth Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
எசாயா 26:7-9, 12, 16-19
7⁽நீதிமான்களின் நெறிகள் நேரியவை;␢ நீர் நேர்மையாளரின் வழியைச்␢ செம்மையாக்குகின்றீர்.⁾
8⁽ஆண்டவரே, உமது நீதியின்␢ நெறியில் நடந்து,␢ உமக்காகக் காத்திருக்கிறோம்,␢ உமது திருப்பெயரும் உமது நினைவும்␢ எங்களுக்கு இன்பமாய் உள்ளன.⁾
9⁽என் நெஞ்சம் இரவில்␢ உம்மை நாடுகின்றது;␢ எனக்குள்ளிருக்கும் ஆவி␢ ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது;␢ உம் நீதித்தீர்ப்புகள்␢ நிலவுலகில் நிலைத்திருக்கையில்␢ வாழ்வோர் நேர்மையைக் கற்றுக் கொள்வர்.⁾
12⁽ஆண்டவரே, நிறைவாழ்வை␢ நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்!␢ ஏனெனில்,␢ எங்கள் செயல்கள் அனைத்தையும்␢ எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.⁾
16⁽ஆண்டவரே, துயரத்தில்␢ உம்மைத் தேடினோம்;␢ நீர் எங்களைத் தண்டிக்கும்போது,␢ உம்மை நோக்கி மன்றாடினோம்.⁾
17⁽பேறுகாலம் நெருங்குகையில்,␢ கருவுற்றவள் தன் வேதனையில்␢ வருந்திக் கதறுவதுபோல்,␢ ஆண்டவரே, நாங்களும்␢ உம் முன்னிலையில் இருக்கின்றோம்!⁾
18⁽நாங்களும் கருவுற்று␢ வேதனையில் துடித்தோம்; ஆனால்,␢ காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்;␢ நாடு விடுதலை பெற,␢ நாங்கள் எதையும் சாதிக்கவில்லை;␢ உலகில் குடியிருக்க,␢ எவரும் பிறக்கப் போவதில்லை.⁾
19⁽இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்;␢ அவர்களின் உயிரற்ற உடல்கள்␢ மீண்டும் எழும்;␢ புழுதியில் வாழ்வோரே,␢ விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்;␢ ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி␢ ஒளியின் பனி;␢ இறந்தோர் நிழல்களின் நாட்டிலும்␢ அதை விழச்செய்கின்றீர்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 102:13-14 and 15, 16-18, 19-21
13⁽நீர் எழுந்தருளி,␢ சீயோனுக்கு இரக்கம் காட்டும்;␢ இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.⁾
14⁽அதன் கற்கள்மீது␢ உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்;␢ அதன் அழிவை நினைத்துப்␢ பரிதவிக்கின்றனர்.⁾
15⁽வேற்றினத்தார்␢ ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;␢ பூவுலகின் மன்னர் யாவரும்␢ அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.⁾
16⁽ஏனெனில் ஆண்டவர்␢ சீயோனைக் கட்டியெழுப்புவார்;␢ அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.⁾
17⁽திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு␢ அவர் செவிகொடுப்பார்;␢ அவர்களின் மன்றாட்டை அவமதியார்.⁾
18⁽இனி வரவிருக்கும் தலைமுறைக்கென␢ இது எழுதி வைக்கப்படட்டும்;␢ படைக்கப்படவிருக்கும் மக்கள்␢ ஆண்டவரைப் புகழட்டும்.⁾
19⁽ஆண்டவர் தம் மேலுலகத்␢ திருத்தலத்தினின்று␢ கீழே நோக்கினார்;␢ அவர் விண்ணுலகினின்று␢ வையகத்தைக் கண்ணோக்கினார்.⁾
20⁽அவர் சிறைப்பட்டோரின்␢ புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;␢ சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை␢ விடுவிப்பார்.⁾
21⁽சீயோனில் ஆண்டவரின் பெயர்␢ போற்றப்படும்.␢ எருசலேமில் அவர்தம் புகழ்␢ அறிவிக்கப்படும்.⁾
Alleluia
மத்தேயு 11:28
28மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
Gospel
மத்தேயு 11:28-30
28மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்