ஜூலை 2026

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

29 ஜூலை, 2026

Memorial of Saints Martha, Mary, and Lazarus

அன்றைய திருப்பலி
Reading I

எரேமியா 15:10, 16-21

10நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு; நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள். 16⁽நான் உம் சொற்களைக்␢ கண்டடைந்தேன்;␢ அவற்றை உட்கொண்டேன்;␢ உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன;␢ என் உள்ளத்திற்கு உவகை அளித்தன.␢ ஏனெனில், படைகளின் ஆண்டவரே,␢ உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.⁾ 17⁽களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து␢ நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை.␢ உம் கை என்மேல் இருந்ததால்␢ நான் தனியனாய் இருந்தேன்.␢ சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.⁾ 18⁽எனக்கு ஏன் தீராத வேதனை?␢ குணமாகாக் கொடிய காயம்?␢ நீர் எனக்குக் கானல் நீரென,␢ ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!⁾ 19⁽எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “நீ திரும்பி வந்தால் நான் உன்னை␢ முன்னைய நிலைக்குக்␢ கொண்டு வருவேன்.␢ என்முன் வந்து நிற்பாய்;␢ பயனில நீக்கிப் பயனுள பேசின்,␢ நீ என் இறைவாக்கினனாக இருப்பாய்.␢ அவர்கள் உன்னிடம்␢ திரும்பி வருவார்கள்;␢ நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.⁾ 20⁽நான் உன்னை அவர்கள்முன்␢ வலிமை வாய்ந்த␢ வெண்கலச் சுவராக்குவேன்;␢ அவர்கள் உனக்கு எதிராய்ப்␢ போராடுவார்கள்; ஆனால்,␢ உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்;␢ ஏனெனில் உன்னை␢ விடுவிக்கவும் காக்கவும்␢ நான் உன்னோடு இருக்கிறேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾ 21⁽தீயோரின் கையினின்று␢ நான் உன்னைக் காப்பேன்;␢ முரடரின் பிடியினின்று␢ உன்னை மீட்பேன்.”⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 59:2-3, 4, 10-11, 17, 18

2⁽தீமை செய்வோரிடமிருந்து␢ எனக்கு விடுதலை அளித்தருளும்;␢ கொலைவெறியரிடமிருந்து␢ என்னைக் காத்தருளும்.⁾ 3⁽ஏனெனில், அவர்கள் என்னைக்␢ கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்;␢ கொடியவர் என்னைத் தாக்கத்␢ திட்டமிட்டுள்ளனர்;␢ நானோ, ஆண்டவரே!␢ குற்றம் ஏதும் இழைக்கவில்லை;␢ பாவம் ஏதும் செய்யவில்லை;⁾ 4⁽என்னிடம் குற்றமில்லாதிருந்தும்,␢ அவர்கள் ஓடிவந்து␢ என்னைத் தாக்க முனைகின்றனர்;␢ என்னை எதிர்கொள்ளுமாறு␢ எழுந்தருளும்;␢ என்னைக் கண்ணோக்கும்,⁾ 10⁽என் கடவுள் தமது பேரன்பால்␢ என்னை எதிர்கொள்ள வருவார்;␢ கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை␢ நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.⁾ 11⁽அவர்களை ஒரேயடியாய்க்␢ கொன்று விடாதேயும்;␢ இல்லையேல், உம் வல்லமையை␢ என் மக்கள் மறந்துவிடுவர்;␢ என் தலைவரே! எங்கள் கேடயமே!␢ அவர்களை உமது வலிமையால்␢ நிலைகுலையச் செய்யும்.⁾ 17⁽என் ஆற்றல் நீரே!␢ உம்மைப் போற்றிப் பாடுவேன்;␢ ஏனெனில், கடவுள் எனக்கு அரண்;␢ கடவுளே எனக்குப் பேரன்பு!⁾
Alleluia

யோவான் 8:12

12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.
Gospel

யோவான் 11:19-27

19சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். 20இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். 21மார்த்தா இயேசவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார். 23இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார். 24மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார். 25இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 26உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். 27மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.