வாசகங்கள்
28 ஜூலை, 2026
Tuesday of the Seventeenth Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
எரேமியா 14:17-22
17⁽நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு;␢ “என் கண்கள் இரவு பகலாகக்␢ கண்ணீர் சொரியட்டும்;␢ இடைவிடாது சொரியட்டும்;␢ ஏனெனில், என் மக்களாம் கன்னிமகள்␢ நொறுங்குண்டாள்;␢ அவளது காயம் மிகப் பெரிது.⁾
18⁽வயல்வெளிகளுக்குச் சென்றால்,␢ இதோ! வாளால் மடிந்தவர்கள்!␢ நகரில் நுழைந்தால்,␢ இதோ! பசியால் நலிந்தவர்கள்!␢ இறைவாக்கினரும் குருக்களும்␢ தங்களுக்கு முன்பின் தெரியாத␢ நாட்டில் அலைகின்றனர்.⁾
19⁽நீர் யூதாவை முற்றிலும்␢ புறக்கணித்துவிட்டீரா?␢ சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா?␢ நாங்கள் குணமாக முடியாதபடி␢ ஏன் எங்களை நொறுக்கினீர்?␢ நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்;␢ பயனேதும் இல்லை!␢ நலம்பெறும் காலத்தை␢ எதிர்பார்த்திருந்தோம்;␢ பேரச்சமே மிஞ்சியது!⁾
20⁽ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும்␢ எங்கள் மூதாதையரின் தீமையையும்␢ நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்;␢ நாங்கள் உமக்கு எதிராய்ப்␢ பாவம் செய்தோம்.⁾
21⁽உம் பெயரை முன்னிட்டு␢ எங்களை உதறித் தள்ளாதீர்;␢ உம் மாட்சிமிகு அரியணையை␢ அவமதிக்காதீர்;␢ நீ எங்களோடு செய்த␢ உடன்படிக்கையை நினைவுகூரும்;␢ அதனை முறித்து விடாதீர்.⁾
22⁽வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள்␢ மழை தரவல்லது எதுவும் உண்டா?␢ வானங்கள் தாமாக␢ மழை பொழிய முடியுமா?␢ எங்கள் இறைவனாகிய ஆண்டவரே,␢ நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்;␢ நாங்கள் உம்மையே␢ எதிர்நோக்கியுள்ளோம்;␢ எனெனில், இவற்றை எல்லாம்␢ செய்பவர் நீரே.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 79:8, 9, 11 and 13
8⁽எம் மூதாதையரின் குற்றங்களை␢ எம்மீது சுமத்தாதேயும்!␢ உம் இரக்கம் எமக்கு␢ விரைவில் கிடைப்பதாக!␢ நாங்கள் மிகவும்␢ தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.⁾
9⁽எங்கள் மீட்பராகிய கடவுளே!␢ உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு␢ எங்களுக்கு உதவி செய்தருளும்;␢ உமது பெயரை முன்னிட்டு␢ எங்களை விடுவித்தருளும்;␢ எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.⁾
11⁽சிறைப்பட்டோரின் பெருமூச்சு␢ உம் திருமுன் வருவதாக!␢ கொலைத் தீர்ப்புப் பெற்றோரை␢ உம் புயவலிமை காப்பதாக.⁾
13⁽அப்பொழுது உம் மக்களும்,␢ உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள்␢ என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்!␢ தலைமுறைதோறும்␢ உமது புகழை எடுத்துரைப்போம்.⁾
Alleluia
:-
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
மத்தேயு 13:36-43
36அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர்.
37அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: “நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்;
38வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்;
39அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.
40எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.
41மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும்* நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்;
42பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.
43அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”