வாசகங்கள்
22 ஜூலை, 2026
Feast of Saint Mary Magdalene
அன்றைய திருப்பலி
Reading I
இனிமைமிகு பாடல் 3:1-4
1⁽இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்;␢ என் உயிர்க்குயிரான அன்பரைத்␢ தேடினேன்; தேடியும்␢ அவரை நான் கண்டேன் அல்லேன்!⁾
2⁽“எழுந்திடுவேன்; நகரத்தில்␢ சுற்றிவருவேன்;␢ தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி␢ என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்”␢ தேடினேன்; தேடியும் அவரைக்␢ கண்டேன் அல்லேன்!⁾
3⁽ஆனால் என்னைக் கண்டனர்␢ சாமக்காவலர்;␢ நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்.␢ “என் உயிர்க்குயிரான அன்பரை␢ நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.⁾
4⁽அவர்களைவிட்டுச்␢ சற்று அப்பால் சென்றதுமே␢ கண்டேன் என் உயிர்க்குயிரான␢ அன்பர்தமை.␢ அவரைச் சிக்கெனப் பிடித்தேன்;␢ விடவே இல்லை;␢ என் தாய்வீட்டுக்கு␢ அவரைக் கூட்டி வந்தேன்;␢ என்னைக் கருத்தாங்கியவளின்␢ அறைக்குள் அழைத்து வந்தேன்.⁾
Reading I - Alternative
2 கொரிந்தியர் 5:14-17
14கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில், ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும்.
15வாழ்வோர் இனி தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.⒫
16ஆகவே, இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால், இப்போது அவ்வாறு செய்வதில்லை.
17எனவே, ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!
Responsorial Psalm
திருப்பாடல்கள் 63:2, 3-4, 5-6, 8-9
2⁽உம் ஆற்றலையும் மாட்சியையும்␢ காண விழைந்து␢ உம் தூயகம் வந்து␢ உம்மை நோக்குகின்றேன்.⁾
3⁽ஏனெனில், உமது பேரன்பு␢ உயிரினும் மேலானது;␢ என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன.⁾
4⁽என் வாழ்க்கை முழுவதும்␢ இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்;␢ கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.⁾
5⁽அறுசுவை விருந்தில்␢ நிறைவடைவதுபோல␢ என் உயிர் நிறைவடையும்;␢ என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால்␢ உம்மைப் போற்றும்.⁾
6⁽நான் படுத்திருக்கையில்␢ உம்மை நினைப்பேன்;␢ இரா விழிப்புகளில்␢ உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.⁾
8⁽நான் உம்மை உறுதியாகப்␢ பற்றிக்கொண்டேன்;␢ உமது வலக்கை␢ என்னை இறுகப் பிடித்துள்ளது.⁾
9⁽என்னை அழித்துவிடத் தேடுவோர்␢ பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர்.⁾
Alleluia
:-
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
யோவான் 20:1-2, 11-18
1வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
2எனவே, அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்.
11மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார்.
12அங்கே வெண்ணாடை அணிந்த இருவானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
13அவர்கள் மரியாவிடம், “அம்மா, ஏன் அழுகிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை” என்றார்.
14இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால், அங்க நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவில்லை.
15இயேசு அவரிடம், “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றார்.
16இயேசு அவரிடம், “மரியா” என்றார். மரியா திரும்பிப் பார்த்து, “ரபூனி” என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு ‘போதகரே’ என்பது பொருள்.
17இயேசு அவரிடம், “என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், ‘என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்’ எனச் சொல்” என்றார்.
18மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.