ஜூலை 2026

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

21 ஜூலை, 2026

Tuesday of the Sixteenth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

மீக்கா 7:14-15, 18-20

14⁽ஆண்டவரே,␢ உமது உரிமைச் சொத்தாய் இருக்கும்␢ மந்தையாகிய உம்முடைய மக்களை␢ உமது கோலினால் மேய்த்தருளும்!␢ அவர்கள் கர்மேலின் நடுவே␢ காட்டில் தனித்து␢ வாழ்கின்றார்களே!␢ முற்காலத்தில் நடந்ததுபோல␢ அவர்கள் பாசானிலும்␢ கிலயாதிலும் மேயட்டும்!⁾ 15⁽எகிப்து நாட்டிலிருந்து␢ நீங்கள் புறப்பட்டுவந்த நாளில்␢ நடந்ததுபோல␢ நான் அவர்களுக்கு␢ வியத்தகு செயல்களைக்␢ காண்பிப்பேன்.⁾ 18⁽உமக்கு நிகரான இறைவன் யார்?␢ எஞ்சியிருப்போரின்␢ குற்றத்தைப் பொறுத்து␢ நீர் உமது உரிமைச் சொத்தில்␢ எஞ்சியிருப்போரின் தீச்செயலை␢ மன்னிக்கின்றீர்;␢ உமக்கு நிகரானவர் யார்?␢ அவர் தம் சினத்தில்␢ என்றென்றும் நிலைத்திரார்;␢ ஏனெனில், அவர்␢ பேரன்புகூர்வதில்␢ விருப்பமுடையவர்;⁾ 19⁽அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்;␢ நம் தீச்செயல்களை␢ மிதித்துப்போடுவார்;␢ நம் பாவங்கள் அனைத்தையும்␢ ஆழ்கடலில் எறிந்து விடுவார்.⁾ 20⁽பண்டைய நாளில்␢ எங்கள் மூதாதையருக்கு␢ நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல␢ யாக்கோபுக்கு␢ வாக்குப் பிறழாமையையும்␢ ஆபிரகாமுக்குப்␢ பேரன்பையும் காட்டியருள்வீர்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 85:2-4, 5-6, 7-8

2⁽உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்;␢ அவர்களின் பாவங்கள் அனைத்தையும்␢ மறைத்துவிட்டீர். (சேலா)⁾ 3⁽உம் சினம் முழுவதையும்␢ அடக்கிக் கொண்டீர்;␢ கடும் சீற்றம் கொள்வதை␢ விலக்கிக் கொண்டீர்.⁾ 4⁽எம் மீட்பராம் கடவுளே!␢ எங்களை முன்னைய␢ நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;␢ எங்கள்மீது உமக்குள்ள சினத்தை␢ அகற்றிக்கொள்ளும்.⁾ 5⁽என்றென்றுமா எங்கள்மேல் நீர்␢ சினம் கொள்வீர்?␢ தலைமுறைதோறுமா␢ உமது கோபம் நீடிக்கும்?⁾ 6⁽உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு,␢ எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?⁾ 7⁽ஆண்டவரே, உமது பேரன்பை␢ எங்களுக்குக் காட்டியருளும்;␢ உமது மீட்பையும்␢ எங்களுக்குத் தந்தருளும்.⁾ 8⁽ஆண்டவராம் இறைவன்␢ உரைப்பதைக் கேட்பேன்;␢ தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு␢ நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;␢ அவர்களோ மடமைக்குத்␢ திரும்பிச் செல்லலாகாது.⁾
Alleluia

யோவான் 14:23

23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.
Gospel

மத்தேயு 12:46-50

46இவ்வாறு, மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள். 47*ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்” என்றார். 48அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார். 49பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே. 50விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.