ஜூலை 2026

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

10 ஜூலை, 2026

Friday of the Fourteenth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

ஒசேயா 14:2-10

2⁽இம்மொழிகளை ஏந்தி␢ ஆண்டவரிடம் திரும்பி வந்து␢ இவ்வாறு சொல்லுங்கள்:␢ “தீவினை அனைத்தையும் § அகற்றியருளும்,␢ நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்;␢ நாங்கள் எங்கள் வாய்மொழியாம்␢ கனிகளை உமக்கு அளிப்போம்;⁾ 3⁽அசீரியர் எங்களை␢ விடுவிக்கமாட்டார்கள்;␢ குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்;␢ எங்கள் கைவினைப் § பொருள்களை நோக்கி,␢ ‘எங்கள் கடவுளே!’ என்று␢ இனிச் சொல்லமாட்டோம்;␢ திக்கற்றவன் உம்மிடத்தில்␢ பரிவைப் பெறுகிறான்” § எனச் சொல்லுங்கள்.⁾ 4⁽அவர்களுடைய § பற்றுறுதியின்மையை␢ நான் குணமாக்குவேன்;␢ அவர்கள்மேல் உளமார␢ அன்பு கூர்வேன்.␢ அவர்கள் மேலிருந்த என் சினம்␢ தணிந்துவிட்டது.⁾ 5⁽நான் இஸ்ரயேலுக்குப்␢ பனி போலிருப்பேன்;␢ அவன் லீலிபோல் மலருவான்;␢ லெபனோனின் மரம்போல் § வேரூன்றி நிற்பான்.⁾ 6⁽அவனுடைய கிளைகள்␢ விரிந்து பரவும்;␢ அவன் பொலிவு␢ ஒலிவ மரம் போல் இருக்கும்;␢ லெபனோனைப்போல்␢ அவன் நறுமணம் பரப்புவான்.⁾ 7⁽அவர்கள் திரும்பிவந்து என்*␢ நிழலில் குடியிருப்பார்கள்;␢ கோதுமைபோல்␢ தழைத்தோங்குவார்கள்.␢ திராட்சைக் கொடிபோல்␢ செழிப்படைவார்கள்.␢ லெபனோனின்␢ திராட்சை இரசம்போல் § அவர்களது புகழ் விளங்கும்.⁾ 8⁽இனிமேல் எப்ராயிமுக்குச்␢ சிலைகள் எதற்கு?␢ நானே அவனுக்குச்␢ செவி சாய்த்து,␢ அவன்மேல்␢ அக்கறை கொண்டுள்ளேன்;␢ நான் பசுமையான␢ தேவதாரு மரம் போன்றவன்.␢ உன் கனி எல்லாம்␢ என்னிடமிருந்தே வரும்.⁾ 9⁽ஞானம் நிறைந்தவன் எவனோ,␢ அவன் இவற்றை § உணர்ந்து கொள்ளட்டும்;␢ பகுத்தறிவு உள்ளவன் எவனோ,␢ அவன் இவற்றை␢ அறிந்து கொள்ளட்டும்;␢ ஆண்டவரின் நெறிகள்␢ நேர்மையானவை;␢ நேர்மையானவர்கள்␢ அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்;␢ மீறுகிறவர்கள்␢ அவற்றில் இடறி விழுகின்றார்கள்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 51:3-4, 8-9, 12-13, 14, 17

3⁽ஏனெனில், என் குற்றங்களை␢ நான் உணர்கின்றேன்;␢ என் பாவம் எப்போதும்␢ என் மனக்கண்முன் நிற்கின்றது.⁾ 4⁽உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;␢ உம் பார்வையில் தீயது செய்தேன்;␢ எனவே, உம் தீர்ப்பினால்␢ உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;␢ உம் தண்டனைத் தீர்ப்பில்␢ நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.⁾ 8⁽மகிழ்வொலியும் களிப்போசையும்␢ நான் கேட்கும்படி செய்யும்;␢ நீர் நொறுக்கிய என் எலும்புகள்␢ களிகூர்வனவாக!⁾ 9⁽என் பாவங்களைப் பாராதபடி␢ உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்;␢ என் பாவக்கறைகளை எல்லாம்␢ துடைத்தருளும்.⁾ 12⁽உம் மீட்பின் மகிழ்ச்சியை␢ மீண்டும் எனக்கு அளித்தருளும்;␢ தன்னார்வ மனம் தந்து␢ என்னைத் தாங்கியருளும்.⁾ 13⁽அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு␢ உம் வழிகளைக் கற்பிப்பேன்;␢ பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.⁾ 14⁽கடவுளே! எனது மீட்பின் கடவுளே!␢ இரத்தப் பழியினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ அப்பொழுது, என் நா␢ உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.⁾ 17⁽கடவுளுக்கேற்ற பலி␢ நொறுங்கிய நெஞ்சமே;␢ கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த␢ உளத்தை நீர் அவமதிப்பதில்லை.⁾
Alleluia

யோவான் 16:13; 14:26

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

மத்தேயு 10:16-23

16“இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே, பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். 17எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். 18என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். 19இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். 20ஏனெனில், பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். 21சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். 22என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். 23அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.