வாசகங்கள்
30 ஜூலை, 2026
Thursday of the Seventeenth Week in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
எரேமியா 18:1-6
1எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:
2“நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.”
3எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல்வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
4குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாத போதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.⒫
5அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு:
6“இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வதுபோல் நானும் உனக்குச் செய்யமுடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 146:1-2, 3-4, 5-6
1⁽அல்லேலூயா! என் நெஞ்சே!␢ நீ ஆண்டவரைப் போற்றிடு;⁾
2⁽நான் உயிரோடு உள்ளளவும்␢ ஆண்டவரைப் போற்றிடுவேன்;␢ என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப்␢ புகழ்ந்து பாடிடுவேன்.⁾
3⁽ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்;␢ உன்னை மீட்க இயலாத␢ மானிட மக்களை நம்ப வேண்டாம்.⁾
4⁽அவர்களின் ஆவி பிரியும்போது␢ தாங்கள் தோன்றிய மண்ணுக்கே␢ அவர்கள் திரும்புவார்கள்;␢ அந்நாளில் அவர்களின் எண்ணங்கள்␢ அழிந்துபோம்.⁾
5⁽யாக்கோபின் இறைவனைத்␢ தம் துணையாகக் கொண்டிருப்போர்␢ பேறுபெற்றோர்;␢ தம் கடவுளாகிய ஆண்டவரையே␢ நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.⁾
6⁽அவரே விண்ணையும் மண்ணையும்␢ கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும்␢ உருவாக்கியவர்;␢ என்றென்றும் நம்பிக்கைக்கு␢ உரியவராய் இருப்பவரும் அவரே!⁾
Alleluia
திருத்தூதர் பணிகள் 16:14
14அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.
Gospel
மத்தேயு 13:47-53
47“விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.
48வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.
49இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;
50பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”
51“இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள்.
52பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.
53இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.