வாசகங்கள்
3 மே, 2027
Philip and James, Apostles Feast
அன்றைய திருப்பலி
First Reading
1 கொரிந்தியர் 15: 1-8
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 19: 2-3, 4-5
2⁽ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு␢ அச்செய்தியை அறிவிக்கின்றது;␢ ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு␢ அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.⁾
3⁽அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;␢ அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.⁾
4⁽ஆயினும், அவற்றின் அறிக்கை␢ உலகெங்கும் சென்றடைகின்றது; § அவை கூறும் செய்தி␢ உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,␢ இறைவன் அங்கே கதிரவனுக்கு␢ ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.⁾
5⁽மணவறையிலிருந்து புறப்படும்␢ மணமகளைப் போல அது வருகின்றது;␢ பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு␢ அது தன் பாதையில் ஓடுகின்றது.⁾
Alleluia
யோவான் 14: 6b, 9c
6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫
9இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்?
Gospel
யோவான் 14: 6-14
6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫
7“நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார்.
8அப்போது பிலிப்பு, அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.
9இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்?
10நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.
11நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.
12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில், நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
13நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.
14நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.