வாசகங்கள்
24 மே, 2027
Ordinary Weekday (Eighth Week in Ordinary Time)
அன்றைய திருப்பலி
First Reading
சீராக் 17: 20-24
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 32: 1-2, 5, 6, 7
1⁽எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,␢ எவரது பாவம் மறைக்கப்பட்டதோ,␢ அவர் பேறு பெற்றவர்.⁾
2⁽ஆண்டவர் எந்த மனிதரின்␢ தீச்செயலை எண்ணவில்லையோ,␢ எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ,␢ அவர் பேறுபெற்றவர்.⁾
5⁽‛என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்;␢ என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;␢ ஆண்டவரிடம் என் குற்றங்களை␢ ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன்.␢ நீரும் என் நெறிகேட்டையும்␢ பாவத்தையும் போக்கினீர். (சேலா)⁾
6⁽ஆகவே, துன்ப வேளையில்␢ உம் அன்பர் அனைவரும்␢ உம்மை நோக்கி மன்றாடுவர்;␢ பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும்␢ அவர்களை அது அணுகாது.⁾
7⁽நீரே எனக்குப் புகலிடம்;␢ இன்னலினின்று என்னை நீர்␢ பாதுகாக்கின்றீர்;␢ உம் மீட்பினால் எழும் ஆரவாரம்␢ என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். (சேலா)⁾
Alleluia
2 கொரிந்தியர் 8: 9
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
மாற்கு 10: 17-27
17இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.
18அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
19உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ⁽‘கொலைசெய்யாதே; § விபசாரம் செய்யாதே; § களவு செய்யாதே; § பொய்ச்சான்று சொல்லாதே; § வஞ்சித்துப் பறிக்காதே; § உன் தாய் தந்தையை மதித்து நட’⁾” என்றார்.
20அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.
21அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார்.
22இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில், அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.⒫
23இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார்.
24சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.
25அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.
26சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
27இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.⒫