மே 2027

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

18 மே, 2027

Ordinary Weekday/ John I, Pope, Martyr

John I, Pope, Martyr
First Reading

சீராக் 2: 1-11

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 37: 3-4, 18-19, 27-28, 39-40

3⁽ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;␢ நாட்டிலேயே குடியிரு;␢ நம்பத் தக்கவராய் வாழ்.⁾ 4⁽ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்;␢ உன் உள்ளத்து விருப்பங்களை␢ அவர் நிறைவேற்றுவார்.⁾ 18⁽சான்றோரின் வாழ்நாள்களை␢ ஆண்டவர் அறிவார்;␢ அவர்கள் உரிமைச் சொத்து␢ என்றும் நிலைத்திருக்கும்.⁾ 19⁽கேடுகாலத்தில்␢ அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை;␢ பஞ்ச காலத்திலும்␢ அவர்கள் நிறைவடைவார்கள்.⁾ 27⁽தீமையினின்று விலகு; நல்லது செய்;␢ எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.⁾ 28⁽ஏனெனில், ஆண்டவர்␢ நேர்மையை விரும்புகின்றார்;␢ தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை;␢ அவர்களை என்றும் பாதுகாப்பார்.␢ பொல்லாரின் மரபினரோ␢ வேரறுக்கப்படுவர்.⁾ 39⁽நேர்மையாளருக்கு மீட்பு␢ ஆண்டவரிடமிருந்து வருகின்றது;␢ நெருக்கடியான நேரத்தில்␢ அவர்களுக்கு வலிமையும் அவரே.⁾ 40⁽ஆண்டவர் துணைநின்று␢ அவர்களை விடுவிக்கின்றார்;␢ பொல்லாரிடமிருந்து␢ அவர்களை விடுவிக்கின்றார்;␢ அவரிடம் அடைக்கலம் புகுந்ததால்,␢ அவர்களை மீட்கின்றார்.⁾
Alleluia

கலாத்தியர் 6: 14

14நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.
Gospel

மாற்கு 9: 30-37

30அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். 31ஏனெனில், “மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். 32அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். 33அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். 34அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில், தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். 35அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். 36பிறகு, அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, 37“இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்” என்றார்.