மே 2027

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

28 மே, 2027

Ordinary Weekday

அன்றைய திருப்பலி
First Reading

சீராக் 44: 1, 9-13

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 149: 1b-2, 3-4, 5-6a and 9b

1⁽அல்லேலூயா!␢ ஆண்டவருக்குப் புதியதொரு § பாடலைப் பாடுங்கள்;␢ அவருடைய அன்பர் சபையில்␢ அவரது புகழைப் பாடுங்கள்.⁾ 2⁽இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக்␢ குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!␢ சீயோனின் மக்கள் தம் அரசரை␢ முன்னிட்டுக் களிகூர்வார்களாக!⁾ 3⁽நடனம் செய்து அவரது பெயரைப்␢ போற்றுவார்களாக;␢ மத்தளம் கொட்டி, யாழிசைத்து␢ அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!⁾ 4⁽ஆண்டவர் தம் மக்கள் மீது␢ விருப்பம் கொள்கின்றார்;␢ தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு␢ வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.⁾ 5⁽அவருடைய அன்பர்␢ மேன்மையடைந்து களிகூர்வராக!␢ மெத்தைகளில் சாய்ந்து␢ மகிழ்ந்து கொண்டாடுவராக!⁾ 6⁽அவர்களின் வாய்␢ இறைவனை ஏத்திப் புகழட்டும்;␢ அவர்களின் கையில் இருபுறமும்␢ கூர்மையான வாள் இருக்கட்டும்.⁾ 9⁽முன்குறித்து வைத்த தீர்ப்பை␢ அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;␢ இத்தகைய மேன்மை␢ ஆண்டவர் தம் அன்பர்␢ அனைவருக்கும் உரித்தானது.␢ அல்லேலூயா!⁾
Alleluia

யோவான் 15: 16

16நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
Gospel

மாற்கு 11: 11-26

11அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். 12மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. 13இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில், அது அத்திப் பழக்காலம் அல்ல. 14அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 15அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். 16கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. 17⁽“‘என் இல்லம் மக்களினங்கள்␢ அனைத்திற்கும் உரிய␢ இறைவேண்டலின் வீடு என␢ அழைக்கப்படும்’⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அவர்களுக்குக் கற்பித்தார்; “ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்றார். 18தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும், கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள். 19மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள். 20காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். 21அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, “ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று” என்றார். 22அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். 23உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து கடலில் விழு’ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும். 24ஆகவே, உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். 25நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். 26அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்” என்று கூறினார்.