மே 2027

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

21 மே, 2027

Ordinary Weekday/ Christopher Magallanes, Priest, and Companions, Martyrs

Christopher Magallanes, Priest, and Companions, Martyrs
First Reading

சீராக் 6: 5-17

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 119: 12, 16, 18, 27, 34, 35

12⁽ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்;␢ எனக்கு உம் விதிமுறைகளைக்␢ கற்பித்தருளும்.⁾ 16⁽உம் விதிமுறைகளில்␢ நான் மகிழ்ச்சியுறுகின்றேன்;␢ உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன்.⁾ 18⁽உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை␢ நான் கண்டுணருமாறு␢ என் கண்களைத் திறந்தருளும்.⁾ 27⁽உம் நியமங்கள் காட்டும் வழியை␢ என்றும் உணர்த்தியருளும்;␢ உம் வியத்தகு செயல்கள்பற்றி␢ நான் சிந்தனை செய்வேன்.⁾ 34⁽உம் திருச்சட்டத்தின்படி நடக்க␢ எனக்கு மெய்யுணர்வுதாரும்.␢ அதை நான் முழு உள்ளத்தோடு␢ கடைப்பிடிப்பேன்.⁾ 35⁽உம் கட்டளைகள் காட்டும் நெறியில்␢ என்னை நடத்தும்; ஏனெனில்,␢ அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.⁾
Alleluia

யோவான் 17: 17b, 17a

17உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.
Gospel

மாற்கு 10: 1-12

1இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். 2பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர். 3அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். 4அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள். 5அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். 6படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்,⁽‘ஆணும் பெண்ணுமாக␢ அவர்களைப் படைத்தார்.⁾ 7⁽இதனால் கணவன்␢ தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத்␢ தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.⁾ 8⁽இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’⁾ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். 9எனவே, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். 10பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். 11இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். 12தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.