மே 2027

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

4 மே, 2027

Easter Weekday

அன்றைய திருப்பலி
First Reading

திருத்தூதர் பணிகள் 16: 22-34

22உடனே மக்கள் திரண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். 23அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக்கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக்காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். 24இவ்வாறு, கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார். 25நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்ற கைதிகளோ இதனைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 26திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. 27சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக்கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலைசெய்துகொள்ள முயன்றார். 28பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, “நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றார். 29சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். 30அவர்களை வெளியே அழைத்து வந்து, “பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். 31அதற்கு அவர்கள், “ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்றார்கள். 32பின்பு, அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். 33அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். 34அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 138: 1-2ab, 2cde-3, 7c-8

1⁽ஆண்டவரே!␢ என் முழுமனத்துடன்␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ தெய்வங்கள் முன்னிலையில்␢ உம்மைப் புகழ்வேன்.⁾ 2⁽உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி␢ உம்மைத் தாள் பணிவேன்;␢ உம் பேரன்பையும்␢ உண்மையையும் முன்னிட்டு␢ உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;␢ ஏனெனில், அனைத்திற்கும் மேலாக␢ உம் பெயரையும் உம் வாக்கையும்␢ மேன்மையுறச் செய்துள்ளீர்.⁾ 3⁽நான் மன்றாடிய நாளில்␢ எனக்குச் செவிசாய்த்தீர்;␢ என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.⁾ 7⁽நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்,␢ என் உயிரைக் காக்கின்றீர்;␢ என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக␢ உமது கையை நீட்டுகின்றீர்;␢ உமது வலக்கையால்␢ என்னைக் காப்பாற்றுகின்றீர்.⁾ 8⁽நீர் வாக்களித்த அனைத்தையும்␢ எனக்கெனச் செய்து முடிப்பீர்;␢ ஆண்டவரே! என்றும் உள்ளது␢ உமது பேரன்பு;␢ உம் கைவினைப் பொருளைக்␢ கைவிடாதேயும்.⁾
Alleluia

யோவான் 16: 7, 13

7நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். 13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.
Gospel

யோவான் 16: 5-11

5இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால், உங்களுள் எவரும் ‘நீர் எங்கே போகிறீர்?’ என்று என்னிடம் கேட்காமலேயே 6நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். 7நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். 8அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார். 9பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில், என்னிடம் அவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை. 10நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில், நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காண மாட்டீர்கள். 11தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில், இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.⒫