ஜூன் 2027

ஞா தி செ பு வி வெ
12345
6789101112
13141516171819
20212223242526
27282930
இன்றுக்கு

வாசகங்கள்

1 ஜூன், 2027

Justin, Martyr Obligatory Memorial (Ninth Week in Ordinary Time)

அன்றைய திருப்பலி
First Reading

தோபித்து 2: 9-14

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 112: 1-2, 7-8, 9

1⁽அல்லேலூயா! ஆண்டவருக்கு␢ அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்;␢ அவர்தம் கட்டளைகளில்␢ அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.⁾ 2⁽அவர்களது வழிமரபு பூவுலகில்␢ வலிமைமிக்கதாய் இருக்கும்;␢ நேர்மையுள்ளோரின் தலைமுறை␢ ஆசிபெறும்.⁾ 7⁽தீமையான செய்தி எதுவும்␢ அவர்களை அச்சுறுத்தாது;␢ ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால்␢ அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.⁾ 8⁽அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்;␢ அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;␢ இறுதியில் தம் எதிரிகள் அழிவதை␢ அவர்கள் காண்பது உறுதி.⁾ 9⁽அவர்கள் வாரி வழங்கினர்;␢ ஏழைகளுக்கு ஈந்தனர்;␢ அவர்களது நீதி␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவர்களது வலிமை␢ மாட்சியுடன் மேலோங்கும்.⁾
Alleluia

எபேசியர் 1: 17-18

17நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக!⒫ 18❮18-19❯கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை,
Gospel

மாற்கு 12: 13-17

13பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். 14அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?” என்று கேட்டார்கள். 15அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார். 16அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “சீசருடையவை” என்றார்கள். 17அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.