வாசகங்கள்
27 மே, 2027
Ordinary Weekday/ Augustine of Canterbury, Bishop, Religious, Missionary
Augustine of Canterbury, Bishop, Religious, Missionary
First Reading
சீராக் 42: 15-25
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 33: 2-3, 4-5, 6-7, 8-9
2⁽யாழிசைத்து ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ பதின் நரம்பு யாழினால்␢ அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;⁾
3⁽புத்தம்புது பாடல் ஒன்றை␢ அவருக்குப் பாடுங்கள்;␢ திறம்பட இசைத்து␢ மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.⁾
4⁽ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;␢ அவருடைய செயல்கள் எல்லாம்␢ நம்பிக்கைக்கு உரியவை.⁾
5⁽அவர் நீதியையும் நேர்மையையும் § விரும்புகின்றார்;␢ அவரது பேரன்பால்␢ பூவுலகு நிறைந்துள்ளது.⁾
6⁽ஆண்டவரது வாக்கினால்␢ வானங்கள் உண்டாயின;␢ அவரது சொல்லின் ஆற்றலால்␢ வான்கோள்கள் எல்லாம் உருவாயின.⁾
7⁽அவர் கடல்நீரைக்␢ குவியல்போல் சேர்த்து வைத்தார்;␢ அந்நீரை ஆழ் நிலவறைகளில்␢ சேமித்து வைத்தார்.⁾
8⁽அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக!␢ உலகில் வாழ்வோர் அனைவரும்␢ அவருக்கு அஞ்சி நடுங்குவராக!⁾
9⁽அவர் சொல்லி உலகம் உண்டானது;␢ அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது.⁾
Alleluia
யோவான் 8: 12
12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார்.
Gospel
மாற்கு 10: 46-52
46இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
47நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார்.
48பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால், அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
49இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.
50அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.
51இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்” என்றார்.
52இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.