மே 2027

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

10 மே, 2027

Easter Weekday/ Damien Joseph De Veuster of Moloka’i, Priest

Damien Joseph De Veuster of Moloka’i, Priest
First Reading

திருத்தூதர் பணிகள் 19: 1-8

1அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல் மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக் கண்டு, 2அவர்களை நோக்கி, “நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே” என்றார்கள். 3“அவ்வாறெனில், நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?” எனப் பவுல் கேட்க, அவர்கள், “நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப் பெற்றோம்” என்றார்கள். 4அப்பொழுது பவுல், “யோவான் மனம் மாறிய மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்” என்றார். 5இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர். 6பவுல் அவர்கள் மீது கைகளை வைத்ததும், தூய ஆவி அவர்கள் மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப்பேச்சு பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். 7அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர். 8பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இறையாட்சிபற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 68: 2-3ab, 4-5acd, 6-7ab

2⁽புகை அடித்துச் செல்லப்படுவதுபோல␢ அடித்துச் செல்லப்படுவர்;␢ நெருப்புமுன் மெழுகு␢ உருகுவது போலக்␢ கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர்.⁾ 3⁽நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்;␢ கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்;␢ மகிழ்ந்து கொண்டாடுவர்.⁾ 4⁽கடவுளைப் புகழ்ந்து பாடி␢ அவரது பெயரை போற்றுங்கள்;␢ மேகங்கள்மீது வருகிறவரை␢ வாழ்த்திப் பாடுங்கள்;␢ ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம்;␢ அவர்முன் களிகூருங்கள்.⁾ 5⁽திக்கற்ற பிள்ளைகளுக்குத்␢ தந்தையாகவும்␢ கணவனை இழந்தாளின்␢ காப்பாளராகவும் இருப்பவர்,␢ தூயகத்தில் உறையும் கடவுள்!⁾ 6⁽தனித்திருப்போர்க்குக் கடவுள்␢ உறைவிடம் அமைத்துத் தருகின்றார்;␢ சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு␢ அழைத்துச் செல்கின்றார்; ஆனால்,␢ அவருக்கு எதிராகக் கிளம்புவோர்␢ வறண்ட நிலத்தில் வாழ்வர்.⁾ 7⁽கடவுளே! நீர் உம்முடைய␢ மக்கள் முன்சென்று␢ பாலைவெளியில் நடைபோட்டுச்␢ செல்கையில், (சேலா)⁾
Alleluia

கொலோசையர் 3: 1

1நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
Gospel

யோவான் 16: 29-33

29இதைக் கேட்ட அவருடைய சீடர்கள், “இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். 30உமக்கு அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்” என்றார்கள்.⒫ 31இயேசு அவர்களைப் பார்த்து, “இப்போது நம்புகிறீர்களா! 32இதோ! காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே விட்டு விடுவீர்கள். ஆயினும், நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார். 33என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.