ஜனவரி 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
இன்றுக்கு

வாசகங்கள்

1 ஜனவரி, 2028

Mary, Mother of God Solemnity (Octave of Christmas).

அன்றைய திருப்பலி
First Reading

எண்ணிக்கை 6: 22-27

22ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 23நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: 24⁽“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி␢ உன்னைக் காப்பாராக!⁾ 25⁽ஆண்டவர் தம் திருமுகத்தை␢ உன்மேல் ஒளிரச்செய்து␢ உன்மீது அருள் பொழிவாராக!⁾ 26⁽ஆண்டவர் தம் திருமுகத்தை␢ உன் பக்கம் திருப்பி␢ உனக்கு அமைதி அருள்வாராக!”⁾⒫ 27இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 67: 2-3, 5, 6, 8

2⁽அப்பொழுது, உலகம்␢ உமது வழியை அறிந்துகொள்ளும்;␢ பிற இனத்தார் அனைவரும்␢ நீர் அருளும் மீட்பை␢ உணர்ந்து கொள்வர். (சேலா)⁾ 3⁽கடவுளே! மக்களினத்தார்␢ உம்மைப் புகழ்வார்களாக!␢ மக்கள் எல்லாரும்␢ உம்மைப் போற்றுவார்களாக!⁾ 5⁽கடவுளே! மக்களினத்தார்␢ உம்மைப் புகழ்வார்களாக!␢ மக்கள் எல்லாரும்␢ உம்மைப் போற்றுவார்களாக!⁾ 6⁽நானிலம் தன் பலனை ஈந்தது;␢ கடவுள், நம் கடவுள்␢ நமக்கு ஆசி வழங்கினார்.⁾
Second Reading

கலாத்தியர் 4: 4-7

4ஆனால், காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.⒫ 6நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள்* உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி ‘அப்பா, தந்தையே’ எனக் கூப்பிடுகிறது. 7ஆகையால், இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.
Alleluia

எபிரேயர் 1: 1-2

1பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், 2இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.
Gospel

லூக்கா 2: 16-21

16விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். 17பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். 18அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். 19ஆனால், மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். 20இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.⒫ 21குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.