வாசகங்கள்
17 ஜனவரி, 2028
Anthony, Abbot Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
1 சாமுவேல் 15: 16-23
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 50: 8-9, 16bc-17, 21 and 23
8⁽நீங்கள் கொண்டுவரும்␢ பலிகளை முன்னிட்டு␢ நான் உங்களைக் கண்டிக்கவில்லை;␢ உங்கள் எரிபலிகள் எப்போதும்␢ என் முன்னிலையில் உள்ளன.⁾
9⁽உங்கள் வீட்டின் காளைகளையோ,␢ உங்கள் தொழுவத்தின்␢ ஆட்டுக்கிடாய்களையோ,␢ நான் ஏற்றுக்கொள்வதில்லை.⁾
16⁽ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து␢ இவ்வாறு கூறுகின்றார்;␢ ‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு␢ உங்களுக்கு என்ன தகுதி?␢ என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு␢ உங்களுக்கு என்ன அருகதை?⁾
17⁽நீங்களோ ஒழுங்குமுறையை␢ வெறுக்கின்றீர்கள்;␢ என் கட்டளைகளைத்␢ தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.⁾
21⁽இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும்,␢ நான் மௌனமாய் இருந்தேன்;␢ நானும் உங்களைப் போன்றவர் என␢ எண்ணிக் கொண்டீர்கள்;␢ ஆனால், இப்பொழுது␢ உங்களைக் கண்டிக்கின்றேன்;␢ உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன்␢ ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.⁾
23⁽நன்றிப்பலி செலுத்துவோர்␢ என்னை மேன்மைப்படுத்துவர்.␢ தம் வழியைச் செம்மைப்படுத்துவோர்␢ கடவுளாம் நான் அருளும்␢ மீட்பைக் கண்டடைவர்.⁾
Alleluia
எபிரேயர் 4: 12
12கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
Gospel
மாற்கு 2: 18-22
18யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?” என்று கேட்டனர்.
19அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.
20ஆனால், மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
21எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும்.
22அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது” என்றார்.