வாசகங்கள்
30 ஜனவரி, 2028
Fourth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
எரேமியா 1: 4-5, 17-19
4⁽எனக்கு அருளப்பட்ட␢ ஆண்டவரின் வாக்கு:⁾
5⁽“தாய் வயிற்றில் உன்னை நான்␢ உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்;␢ நீ பிறக்குமுன்பே உன்னைத்␢ திருநிலைப்படுத்தினேன்;␢ மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக␢ உன்னை ஏற்படுத்தினேன்.”⁾
17நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.
18இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.
19அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 71: 1-2, 3-4, 5-6, 15-17
1⁽ஆண்டவரே! உம்மிடம் நான்␢ அடைக்கலம் புகுந்துள்ளேன்;␢ ஒருபோதும் நான் வெட்கமுற␢ விடாதேயும்.⁾
2⁽உமது நீதிக்கேற்ப␢ என்னை விடுவித்தருளும்;␢ எனக்கு நீர் செவிசாய்த்து␢ என்னை மீட்டுக் கொள்ளும்.⁾
3⁽என் அடைக்கலப் பாறையாக␢ நீர் இருந்தருளும்;␢ கோட்டை அரணாயிருந்து␢ என்னை மீட்டருளும்;␢ ஏனெனில், நீர் எனக்குக்␢ கற்பாறையாகவும்␢ அரணாகவும் இருக்கின்றீர்.⁾
4⁽என் கடவுளே, பொல்லார் கையினின்று␢ என்னைக் காத்தருளும்;␢ நெறிகேடும் கொடுமையும் நிறைந்தோர்␢ பிடியினின்று என்னைக் காத்தருளும்.⁾
5⁽என் தலைவரே, நீரே என் நம்பிக்கை;␢ ஆண்டவரே, இளமைமுதல்␢ நீரே என் நம்பிக்கை.⁾
6⁽பிறப்பிலிருந்து நான் உம்மைச்␢ சார்ந்துள்ளேன்;␢ தாய் வயிற்றிலிருந்து␢ நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்;␢ உம்மையே நான் எப்போதும்␢ புகழ்ந்து போற்றுவேன்.⁾
15⁽என் வாய் நாள்தோறும்␢ உமது நீதியையும் நீர் அருளும்␢ மீட்பையும் எடுத்துரைக்கும்;␢ உம் அருட் செயல்களை␢ என்னால் கணிக்க இயலாது.⁾
16⁽தலைவராகிய ஆண்டவரே!␢ உமது வலிமைமிகு செயல்களை␢ எடுத்துரைப்பேன்;␢ உமக்கே உரிய நீதிமுறைமையைப்␢ புகழ்ந்துரைப்பேன்.⁾
17⁽கடவுளே, என் இளமைமுதல்␢ எனக்குக் கற்பித்து வந்தீர்;␢ இனிவரும் நாள்களிலும்␢ உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.⁾
Second Reading
1 கொரிந்தியர் 12: 31 - 13: 13 or 1 கொரிந்தியர் 13: 4-13
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
லூக்கா 4: 18
18⁽“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள்பொழிவு செய்துள்ளார்.␢ ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்␢ சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,␢ பார்வையற்றோர் பார்வைபெறுவர் என␢ முழக்கமிடவும்␢ ஒடுக்கப்பட்டோரை␢ விடுதலை செய்து அனுப்பவும்⁾
Gospel
லூக்கா 4: 21-30
21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.
22அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.
23அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.
24ஆனால், நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
25உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.
26ஆயினும், அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.
27மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.⒫
28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்;
29அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்.
30அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.