வாசகங்கள்
16 ஜனவரி, 2028
Second Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 62: 1-5
1⁽சீயோனின் வெற்றி␢ வைகறை ஒளியெனவும்,␢ அதன் மீட்பு சுடர் விளக்கெனவும்␢ வெளிப்படும்வரை,␢ அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்;␢ எருசலேம் பொருட்டுச்␢ செயலற்று அமைதியாயிரேன்.⁾
2⁽பிறஇனத்தார்␢ உன் வெற்றியைக் காண்பர்;␢ மன்னர் யாவரும்␢ உன் மேன்மையைப் பார்ப்பர்;␢ ஆண்டவர் தம் நாவினால் சூட்டும்␢ புதியதொரு பெயரால்␢ நீ அழைக்கப்படுவாய்.⁾
3⁽ஆண்டவரின் கையில் நீ␢ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்;␢ உன் கடவுளின் கரத்தில்␢ அரச மகுடமாய் விளங்குவாய்.⁾
4⁽‘கைவிடப்பட்டவள்’ என்று␢ இனி நீ பெயர்பெற மாட்டாய்;␢ ‘பாழ்பட்டது’ என␢ இனி உன் நாடு அழைக்கப்படாது;␢ நீ ‘எப்சிபா’* என்று அழைக்கப்படுவாய்;␢ உன் நாடு ‘பெயுலா’**என்று பெயர் பெறும்.␢ ஏனெனில், ஆண்டவர் உன்னை␢ விரும்புகின்றார்;␢ உன் நாடு மணவாழ்வு பெறும்.⁾
5⁽இளைஞன் கன்னிப் பெண்ணை␢ மணப்பதுபோல␢ உன்னை எழுப்பியவர்␢ உன்னை மணந்து கொள்வார்;␢ மணமகன் மணப்பெண்ணில்␢ மகிழ்வதுபோல்␢ உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 96: 1-2a, 2b-3, 7-8, 9-10
1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;⁾
2⁽ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;␢ அவர் பெயரை வாழ்த்துங்கள்;␢ அவர் தரும் மீட்பை␢ நாள்தோறும் அறிவியுங்கள்.⁾
3⁽பிற இனத்தார்க்கு␢ அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;␢ அனைத்து மக்களினங்களுக்கும்␢ அவர்தம் வியத்தகு செயல்களை § அறிவியுங்கள்.⁾
7⁽மக்களினங்களின் குடும்பங்களே,␢ ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;␢ மாட்சியையும் ஆற்றலையும்␢ ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.⁾
8⁽ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை␢ அவருக்குச் சாற்றுங்கள்;␢ உணவுப்படையல் ஏந்தி அவர்தம்␢ கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.⁾
9⁽தூய கோலத்துடன்␢ ஆண்டவரை வழிபடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ அவர் திருமுன் நடுங்குங்கள்.⁾
10⁽வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;␢ ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகு உறுதியாக␢ நிலைநிறுத்தப்பட்டுள்ளது;␢ அது அசைவுறாது;␢ அவர் மக்களினங்களை␢ நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.⁾
Second Reading
1 கொரிந்தியர் 12: 4-11
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Alleluia
2 தெசலோனிக்கர் 2: 14
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
யோவான் 2: 1-11
1மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.
2இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.
3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.
4இயேசு அவரிடம், “அம்மா,* அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.
5இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.
6யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.
7இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.
8பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
9பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,
10“எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.
11இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.