வாசகங்கள்
9 ஜனவரி, 2028
Baptism of the Lord Feast
அன்றைய திருப்பலி
First Reading
எசாயா 42: 1-4, 6-7 or எசாயா 40: 1-5, 9-11
1⁽இதோ! என் ஊழியர்! அவருக்கு நான்␢ ஆதரவு அளிக்கிறேன்;␢ நான் தேர்ந்துகொண்டவர் அவர்;␢ அவரால் என் நெஞ்சம்␢ பூரிப்படைகின்றது;␢ அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்;␢ அவர் மக்களினங்களுக்கு␢ நீதி வழங்குவார்.⁾
2⁽அவர் கூக்குரலிடமாட்டார்;␢ தம்குரலை உயர்த்தமாட்டார்;␢ தம் குரலொலியைத்␢ தெருவில் எழுப்பவுமாட்டார்.⁾
3⁽நெரிந்த நாணலை முறியார்;␢ மங்கி எரியும் திரியை அணையார்;␢ உண்மையாகவே␢ நீதியை நிலை நாட்டுவார்.⁾
4⁽உலகில் நீதியை நிலைநாட்டும்வரை␢ அவர் சோர்வடையார்;␢ மனம் தளரமாட்டார்;␢ அவரது நீதிநெறிக்காகத்␢ தீவு நாட்டினர் காத்திருப்பர்.⁾
6⁽ஆண்டவராகிய நான்␢ நீதியை நிலைநாட்டுமாறு␢ உம்மை அழைத்தேன்;␢ உம் கையைப் பற்றிப்பிடித்து,␢ உம்மைப் பாதுகாப்பேன்;␢ மக்களுக்கு உடன்படிக்கையாகவும்␢ பிற இனத்தாருக்கு ஒளியாகவும்␢ நீர் இருக்குமாறு செய்வேன்.⁾
7⁽பார்வை இழந்தோரின்␢ கண்களைத் திறக்கவும்,␢ கைதிகளின் தளைகளை அறுக்கவும்,␢ இருளில் இருப்போரைச்␢ சிறையினின்று மீட்கவும்␢ உம்மை அழைத்தேன்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 104: 1b-2, 3-4, 24-25, 27-28, 29-30
1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!␢ நீர் மாண்பையும் மாட்சியையும்␢ அணிந்துள்ளவர்.⁾
2⁽பேரொளியை␢ ஆடையென அணிந்துள்ளவர்;␢ வான்வெளியைக்␢ கூடாரமென விரித்துள்ளவர்;⁾
3⁽நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின்␢ அடித்தளத்தை அமைத்துள்ளவர்;␢ கார் முகில்களைத்␢ தேராகக் கொண்டுள்ளவர்;␢ காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்!⁾
4⁽காற்றுகளை உம்␢ தூதராய் நியமித்துள்ளவர்;␢ தீப்பிழம்புகளை உம்␢ பணியாளராய்க் கொண்டுள்ளவர்.⁾
24⁽ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்␢ எத்தனை எத்தனை!␢ நீர் அனைத்தையும்␢ ஞானத்தோடு செய்துள்ளீர்!␢ பூவுலகம்␢ உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.⁾
25⁽இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்;␢ அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக␢ வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.⁾
27⁽தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று␢ இவையெல்லாம்␢ உம்மையே நம்பியிருக்கின்றன.⁾
28⁽நீர் கொடுக்க,␢ அவை சேகரித்துக் கொள்கின்றன;␢ நீர் உமது கையைத் திறக்க,␢ அவை நலன்களால் நிறைவுறுகின்றன.⁾
29⁽நீர் உமது முகத்தை மறைக்க,␢ அவை திகிலடையும்;␢ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,␢ அவை மாண்டு மறுபடியும்␢ புழுதிக்கே திரும்பும்.⁾
30⁽உமது ஆவியை நீர் அனுப்ப,␢ அவை படைக்கப்பெறுகின்றன;␢ மண்ணகத்தின் முகத்தைப்␢ புதுப்பிக்கின்றீர்.⁾
Second Reading
தீத்து 2: 11-14; 3: 4-7
11ஏனெனில், மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.
12நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம்.
13மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது.
14அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.⒫
4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது,
5நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புது பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.
6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார்.
7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்.
Alleluia
லூக்கா 3: 16
16யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால், என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
Gospel
லூக்கா 3: 15-16, 21-22
15அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.
16யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால், என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
21மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.
22தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, ⁽“என் அன்பார்ந்த மகன் நீயே, உன் § பொருட்டு நான் பூரிப்படைகிறேன்”⁾ என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.